கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு மற்றும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குண்டு வெடிப்பா அல்லது வேறு வகையான விபத்தா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
குண்டு வெடித்த பின்பு, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வெளியான காட்சிகளில் அனைவரும் அலறி ஆங்காங்கே ஓடிகிறார்கள்.
காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், தகவலறிந்த பின், தீயணைப்பு மீட்புக் குழுவினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தவிர படுத்தினர்.
மேலும், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.