இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (25) மாலை உயிரிழந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பவதாரணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.20 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது கணவர் ஓட்டல் தொழில் செய்துவந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
இதனிடையே தற்போது இசைஞானி இளையராஜாவும் இலங்கையில்தான் உள்ளார். இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக அவர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி : கொழும்பில் இசை நிகழ்ச்சி: இலங்கையை வந்தடைந்தார் இளையராஜா