இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில், 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 107 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதுடன், இதனால், மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என தெரிக்கப்பட்டுள்ளது.