ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990ஆம் ஆண்டில் அனுப்பிய செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் இறுதிக்குள் அது பூமியில் விழலாம் என ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ERS-2 என்ற செயற்கைக்கோள் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது.
ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் அனுப்பப்பட்ட ‘கிராண்ட்பாதர்’ என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் ஐரோப்பா விண்வெளி நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அதன் ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியது. தற்போது, இந்த விண்ணலத்தின் கட்டுப்பாடு இல்லாத நிலையில், அதன் பாகங்கள் எங்கு விழும் என தெரியவில்லை.
எனினும், ஐரோப்பாவில் உள்ள கடல்களில் உடைந்த பாகங்களை விழ வைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்ததும் இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்றாலும், சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘கிராண்ட்பாதர்’ செயற்கைகோளானது பூமியின் நிலப்பரப்பு, கடல் வெப்பநிலை, ஓசோன் அடுக்கு ஆகியவற்றில் நீண்ட கால தரவுகளை வழங்கியதுடன், துருவ பனி அளவு, இயற்கை பேரிடர்களை கண்காணித்து பூமிக்கு தகவல்களை அனுப்பி வைத்திருந்தது.