இங்கிலாந்தை சேர்ந்த தமிழ் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணரான பிரின் பிரதாபன், UK TVயின் மிகப்பெரிய சமையல் போட்டியின் 20ஆவது தொடரை வென்று, MasterChef Champion 2024 என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.
MasterChef நடுவர்களாக செயற்பட்ட ஜோன் டோரோட் மற்றும் கிரெக் வாலஸ் ஆகியோர், வெற்றிப்பெற்ற பிரின் பிரதாபனுக்கு மாஸ்டர்செஃப் கிண்ணத்தை வழங்கினர்.
இதனையடுத்து, 29 வயதான பிரின், இலண்டன் தொலைக்காட்சி மாஸ்டர்செஃப் வரலாற்றின் இரண்டு தசாப்தகால சிறந்த சம்பியன்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
எட்டு வாரங்கள் நீடித்த கடினமான சவால்களுக்குப் மத்தியில் சுமார் 57 சமையல் போட்டியாளர்களை கடந்து வந்த பிரின் பிரதாபன் இறுதியில் வெற்றியை தனதாக்கினார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தனது பெற்றோர், உணவு மற்றும் சுவையின் மீதான தனது விருப்பத்தை ஊக்குவித்ததாக கூறிய பிரின் பிரதாபன் அற்புதமான, காரமான சமையல் பின்னணியை தமது பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொண்ட தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கையின் தமிழ் பாரம்பரியம் மற்றும் தமது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாக தனது சமையல் உள்ளதாக பிரின் பிரதாபன் பெருமிதமடைகின்றார்.
”பிரின் அற்புதமான திறமையுடைய ஒரு அசாதாரண சமையல்காரர், பிரினுருக்கு நுட்பம், படைப்பாற்றல் உள்ளது. நாங்கள் இதுவரை கண்டிராத புத்திசாலித்தனமான திறமைக இவரிடம் உள்ளது“ என போட்டியின் நடுவர்கள் பிரின் பிரதாபனை பாராட்டியுள்ளார்.
Photographs courtesy BBC