மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சௌலோஸ் மற்றும் 9 பேர் பயணித்த இராணுவ விமானம் மாயமாகியுள்ளது. இந்த விமானம் நேற்று காலை 9.17 மணிக்கு மலாவி தலைநகர் லிலோங்கில் இருந்து புறப்பட்டது.
அந்த விமானம் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் 45 நிமிடங்களில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்காததால் விமானத்தை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
இதனிடையே விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானதால் மலாவி துணை ஜனாதிபதி சவுலஸ் சிலீமா விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது குறித்து பேசிய மலாவி நாட்டு ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா, “மாயமான விமானத்தை தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேடுதல் பணியை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிடம் தேடுதல் நடவடிக்கைகான உதவி கோரப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
அத்துடன், விபத்தை அடுத்து மலாவி ஜனாதிபதி தனது வெளிநாட்டு பயணத்தை ஒத்திவைத்துள்ளார்.