திருடப்படும் Android அலைபேசிகளை தானாகத் தடை செய்யும் புதிய அம்சத்தைப் Google நிறுவனம் பிரேசிலில் சோதிக்கவுள்ளது
அதற்காக செயற்கை நுண்ணறிவைக் கொண்ட புதிய அமைப்பை Google உருவாக்கியுள்ளது.
பயனாளர்கள் தமது ரகசியத் தகவல்களைக் கொண்ட செயலிகளை மறைத்து வைத்து அவற்றைப் பயன்படுத்த தனியாக ஒரு கடவுச்சொல்லை செயற்படுத்தி வைக்க முடியும்.
அத்துடன், திருட்டு சம்பவத்தை குறிக்கும் திடீர் அசைவுகளை புதிய அமைப்பு கண்டறிந்து அலைபேசியின் திரை தானாகத் தடை செய்யப்படும்.
இந்த சேவையானது பிரேசிலில் ஜூலை மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது.