தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம்நீண்ட கால கடன் கட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. அவ்வாறு செல்லும்போதுபாதகமான நிலைமை ஏற்படும். ஒரு நாடாக பாதகமானநிலைமைக்கு நாம் செல்லக்கூடாது. மேலும் எதிர்வரும் மாதங்களில் அத்தியாவசிய பொருள்இறக்குமதி தொடர்பில் எந்த பிரச்சினையும் வராது.
அதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாகஎடுப்போம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய டொலர் நெருக்கடி விவகாரம் தொடர்பில் வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு,
கேள்வி : நாடு எதிர் கொண்டிருக்கின்ற டொலர் நெருக்கடி நிலைமை தற்போது எவ்வாறு இருக்கின்றது?
பதில் : பல்வேறு தரப்பினரும் இதனை நெருக்கடி நெருக்கடி என்று கூறினாலும்இங்கு உண்மையில் நெருக்கடி ஒன்று இல்லை. தற்போதையசூழலில் சகலரும் தமது வேலைத் திட்டங்களை மேற்கொண்டு செல்ல கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.
சில சில சிறிய அளவிலான தடைகள் இருந்தாலும் அது நெருக்கடியை நோக்கி நகரவில்லை. மிக முக்கியமாகசகலவிதமான அத்தியாவசிய பொருட்களையும் தற்போது இறக்குமதி செய்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அப்படிப்பார்க்கும்போது எங்கும் எந்தவிதமான ஒரு நெருக்கடியும் தெரியவில்லை. சகலரும் தமது கடமையைஎவரும் பதற்றப்படாமல் தமது செயற்பாடுகளை பரபரப்பின்றி பதற்றம் இன்றி செய்து கொண்டுபோனால் அது ஒரு பிரச்சினையாக யாருக்கும் தெரியாது.
கேள்வி : எப்படி இருப்பினும்எமக்கான ஒரு டொலர் பற்றாக்குறை இருக்கின்றமையை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்வரும்காலங்களில் டொலர் உள்வருகையை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு காணப்படுகின்றன?
பதில் : தற்போது ஏற்றுமதி வருமானம் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.அத்துடன் ஏற்றுமதி மூலம் கிடைக்கின்ற நிதியை புதிய சட்டங்களை கொண்டு வந்து அவற்றை ரூபாவாகமாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் பணிபுரிகின்றஇலங்கை தொழிலாளர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதற்காக புதிய திட்டங்களை நாங்கள்கொண்டு வந்திருக்கின்றோம். அவை தற்போது நடைமுறையில் செயல்படுத்தப்படுகின்றன.
அதுமட்டுமன்றி இலங்கையில் தற்போது எம்மால் பயன்படுத்தப்படாமல்இருக்கின்ற சில வளங்களை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேற்கொண்டு டொலர் உள் வருகையைஅதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் அரசாங்கம் நீண்டகால கடன்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல பேச்சுவார்த்தைகளைபல்வேறு நாடுகளுடன் மேற்கொண்டு வருகின்றது. மத்தியவங்கி இன்னும் பல நாடுகளின் மத்திய வங்கியுடன் நாணய பரிமாற்று திட்டங்களைமேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது.
தற்போது இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பும்போக்கு அதிகரித்து இருக்கின்றது. இவை நடைபெறுவதுடன் சுற்றுலாத்துறையும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுகொண்டிருக்கின்றது. அதனால் விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வரமுடியும். நீண்டகாலம் செல்லாமல் இதிலிருந்து நாம் வெளியே வரமுடியும்.
கேள்வி : வெளிநாடுகளில் பணிபுரிகின்றஇலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி குறைவடைந்து இருப்பதாக அறிவித்திருந்தீர்கள். அது எவ்வாறு நடைபெறுகிறது?
பதில் : இது ஒரு சில சட்ட விரோதமான முறைகளில் இடம்பெற்றதனால் எமக்கான உள்வருகை குறைவடைந்தது. ஹவாலா போன்ற முறைகளின் ஊடாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.எனினும் அவற்றை மீள அதிகரித்துக் கொள்வதற்காகநாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.