இலங்கையில் இடம்பெறவுள்ள எல்.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்காக பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் இலங்கை வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சோயிப் மாலிக் (Shoaib Malik,உருது: شعیب ملک பிறப்பு: பிப்ரவரி 1 1982), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
1999 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார். 2001 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் தேர்வுப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.
மேலும் இவர் ஆசிய லெவன் அணி, பார்படோசு டிரிடெண்ட்ஸ், குஜ்ரன்வாலா துடுப்பாட்ட சங்கம், ஹோபர்ட் ஹரிகேன்ஸ், கராச்சி கிங்ஸ், முல்தான் சுல்தான், பாக்கித்தான் ரெசர்வ்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்