செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை அங்கம் – 24 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 24 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

அங்கம் – 24 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 24 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

4 minutes read

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

– வணக்கம்LONDON –

 

 

1374206_10204282985407514_6407614816567164731_n பல இடப்பெயர்வுகளை சந்தித்த மக்கள் பொருட்களை சாதூரியமாக நகர்த்தி இன்னுமோர் இடத்துக்கு கொண்டு செல்வதில் சிரமத்தை எதிர் நோக்கினாலும் அவ்வாறு செய்து முடிக்க வேண்டிய தேவை காணப்பட்டது. அந்த வகையில் உள்ளூர் சிறு வியாபாரத்தில் ஈடுபட்டவகள் ஆங்கங்கே தங்களது கடை பொருட்களை நகர்த்தி வியாபாரம் செய்து வந்தமை போரின் ஆரம்ப காலத்தில் மக்களுக்கு பெரும் உதவியாக அமைந்திருந்தது.

இடம்பெயந்த இடங்களில் மக்கள் சிறு குடில்களை அமைத்து தங்கள் கையில் இருந்த வியாபார பொருட்களை அந்த இடத்தில் வைத்து வாணிபம் செய்து வந்தனர்.

மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கிய இடப்பெயர்வு வரைக்கும் கிளிநொச்சி நகரும் அதனை அண்டிய பிரதேசமும் வியாபார கேந்திர நிலையமாக காணப்பட்டாலும் கிளிநொச்சி நகர் இடப்பெயரத் தொடங்கியதும் கிளிநொச்சி இருந்து கிழக்கு திசை நோக்கி பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் புளியம்பொக்கணை பிரதேசத்திக்கு அப்பாலும் கிளிநொச்சி வட்டக்கச்சி தர்மபுரம் வீதியின் ஊடாக இராமநாதபுரத்துக்கு அப்பாலும் கல்மடுவிலிருந்து தர்மபுரம் பகுதியிலும் இடம்பெயர்ந்து இருந்த மக்கள் பல்வேறு சிறு வியாபார நிலையங்களை அமைத்தும் சிறிய கடைகளை அமைத்தும் வாணிபத்தில் ஈடுபட்டனர்.

கடுமையான போரின் மத்தியிலும் பொருட்களை ஏதோ ஒரு வகையில் விற்பனை செய்தமையும் பண்ட மற்றாக பொருட்களை மாற்றிக் கொண்டமையும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் நகர்த்தி சென்றது

இடம்பெயர்ந்த இடங்களில் கைவிட்ட தென்னை மரம் மற்றும் பயன்தரும் மரங்களில் இருந்து இளநீர் பருவத்திலான தேங்காய்களையும் மாங்காய் பிஞ்சுகளையும் பறித்து வந்து உணவு தட்டுபாட்டை ஏதிர் நோக்கி மக்களுக்காக விற்பனை செய்து வந்தனர்.

பின்னாளில் ஒரு தேங்காய்க்காக ஒரு மோட்டர் சைக்கிள் (உந்துருளி) பண்டமாற்றம் செய்யப்பட்டது………………………………

 

 

10669993_10204282988887601_4447069933659889342_n10665370_10204282990447640_4685200630196618391_n10392280_10204282984927502_1577587820750639309_n10151867_10204282987287561_762908175696573237_n1921907_10204282992487691_797646965414643573_n1545944_10204282991327662_268491554489906307_n

 

 

 

 

தொடரும்……….

 

 

 

dr.sathy_ வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More