2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
– வணக்கம்LONDON –
இடப்பெயர்வு ஒருவித சோர்வையும் பதட்டத்தையும் அனைவர் மத்தியிலும் ஏற்படுத்திக்கொண்டு இருந்தது. சுகாதார திணைக்களத்தின் பணியை பொறுத்த வரையில் பதட்டத்தை ஏற்றுக்கொண்டு நிதானத்துடன் மேலும் ஒருபடி உயர்ந்து சேவைகளை விஸ்தரிக்க வேண்டி இருந்தது.
மன்னார், வவுனியா மாவட்டங்களில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்த மக்கள் வட்டக்கச்சி பரந்தன் ஊடாக தர்மபுரம், விஸ்வமடு, உடையார்கட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து குடியேறத் தொடங்கினர். இடம்பெயர்ந்து கைவிட்டு சென்ற பிரதேசங்கள் சூனிய பிரதேசங்களாக காட்சியளித்தன. புதிதாக குடியேறுகின்ற பிரதேசங்கள் மிக சுறுசுறுப்பாக காணப்பட்டாலும் உணவுக்கும் நீருக்கும் கஷ்டங்கள் தொடங்கின.
இவ்வாறே வன்னி மேற்கு பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சியை கடந்து மக்கள் சென்றது அடைந்தது போல் முல்லைத்தீவு நகரப் பகுதியில் இருந்தும் மற்றும் முள்ளியவளை தண்ணீர்ரூற்றை அண்டிய பிரதேசங்களில் இருந்து இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் புதுக்குடியிருப்பை அண்டிய பிரதேசங்களை வந்தடைந்தனர். எனவே தர்மபுரம் தொடக்கம் புதுக்குடியிருப்பு வரையான இருபது கிலோமீற்றர் பிரதான வீதி சன நெரிசல் மிக்க குடியேற்ற பகுதிகளாக காட்சியளித்தன. ஆயிரக்கணக்கான தற்காலிக வீடுகளும் குடில்களும் எங்கும் பரவி காணப்பட்டன. கிளிநொச்சி சுகாதார திணைக்களத்தின் கீழ் கண்டாவளை, தர்மபுரம் ஆகிய வைத்தியசாலைகளின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டதுடன் விஸ்வமடு, கல்லாறு, புன்னைநீராவி, முங்கிலாறு, உடையார்கட்டு போன்ற இடங்களில் இருந்த பாடசாலைகள் தற்காலிக வைத்தியாலைகளாக இயக்கப்பட்டன.
இவ்வாறே முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை மற்றும் முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், மல்லாவி ஆகிய இடங்களில் அமைந்திருந்த வைத்தியாலைகள் மூடப்பட்டு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் Dr. வரதராஜன் அவர்களும் , மற்றும் வைத்தியர்களும் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் சேவைகளை விஸ்தரித்தனர். அத்துடன் வள்ளிபுனம் தேவிபுரம், பாடசாலைகளும் சுகந்திரபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களும் தற்காலிக வைத்தியாலைகள் இயங்குவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர்.
முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் Dr. வரதராஜன் அவர்கள் சோர்வின்றி கடமையாற்றி கொண்டிருந்தார். அது தவிர Dr. வரதராஜன் அவர்கள் ஏற்கனவே வாகரை பிரதேசத்தில் இவ்வாறன நெருக்கடிக்கு மத்தியில் சிறப்பாக செயற்ப்பட்டது மறக்க முடியாது. பின்னாளில் அவருடைய அனுபவம் சேவைகளை ஒழுங்குபடுத்த எமக்கு உதவியாக இருந்தது.
இடம்பெயர்ந்த பொதுமக்களை பொறுத்தவரை தர்மபுரம் தொடக்கம் புதுக்குடியிருப்பு வரையான பிரதேசங்களில் இயங்கிய பத்துக்கு மேற்பட்ட வைத்தியாலைகளில் சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் நெருக்கடி மத்தியில் செய்யப்பட்டிருந்தன.
தர்மபுரம் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்திருந்த இரண்டு ஏக்கர் காணியை துப்பரவு செய்து அதில் தற்காலிக நோயாளர் விடுதிகளும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கான தங்கிமிடம் அமைக்கப்பட்டது. இதனை அப்போதைய கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த திரு வேதநாயகன் அவர்கள் திறந்து வைத்தார். அப்போதய சூழ்நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு சுமார் 900 மக்கள் வெளிநோயாளர் பிரிவு சிகிச்சைக்காக வந்து கொண்டிருந்தனர். அத்துடன் சுமார் 300 பேர் வைத்தியசாலையில் தங்கி நின்று சிகிச்சை பெறவேண்டிய நிலை காணப்பட்டது.
ஒரு சமயத்தில் தர்மபுரம், புதுக்குடியிருப்பு வைத்தியாலை பிரதான வைத்தியசாலையாக விளங்கியது. ஆனால் இரு முனைகளிலும் போர் பதட்டம் காணப்பட்டது. அதனை அண்மித்த பிரதேசங்களில் கடுமையான சண்டைகள் நடைபெற்றதுடன் செல்வீச்சு , குண்டுவீச்சு என்பனவற்றின் வெடி ஓசைகள் அனைவரைவும் தயங்க செய்ததுடன் அடுத்த பிரதேசத்திக்கான இடப்பெயர்வை துாண்டிய வண்ணம் இருந்தது..
தொடரும்……….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/