March 27, 2023 1:02 am

அங்கம் – 28 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 28 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

 

– வணக்கம்LONDON –

 
A8மக்கள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த போது சில பிரதேசங்கள் செறிவான குடியேற்றமாக காணப்பட்டதோடு வன்னி பிரதான இயங்கு நிலை நகரமாக விளங்கியது. 2008 கார்த்திகை மாதங்களில் மிக செறிவான குடியேற்ற பிரதேசமாக தர்மபுரம் பகுதி காணப்பட்டது. அங்கு இடம்பெயர்ந்த நிலையங்களும் அரச மற்றும் பொது நிறுவனங்களும் வீதியின் இரு மருங்கிலும் இயங்கி வந்தன ஏற்கனவே இயங்கி வந்த தர்மபுரம் வைத்தியசாலை பல நுற்றுக்கணக்கான நோயாளிகளை பராமரிக்கும் பிரதான வைத்தியசாலையாக செயற்ப்பட்டது .

இக்காலப்பகுதியில் தர்மபுரம் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக வைத்திய கலாநிதி பிறைட்டன் கடமை ஆற்றினார். அவரது துணைவியார் வைத்திய கலாநிதி றிமதி அவர்கள் வன்னியில் பல வருடங்கள் கடமையாற்றினார் என்பது. குறிப்பிட தக்கது. இவர் இடப்பெயர்வுகளின் பின்னர் முழங்காவில் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக இரவு பகலாக கடமையாற்றினார்.

A7

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியாலையில் கடமையாற்றிய பல வைத்தியர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் தர்மபுரம் வைத்தியசாலை பகுதியிலும் அயல்ப் பகுதியிலும் குடியேறினார்கள். தங்களுக்கு பாதுகாப்பாக வாழ்விடங்களுக்கு அருகில் பதுங்கு குழிகளை அமைத்து சவாலுடன் கடமையை செய்துகொண்டிருந்தனர்.

வன்னியில் இருந்து மிகவும் சுகவீனம் உற்றவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மேற்ப்படி வைத்தியாலையில் இருந்து ஓமந்தை ஊடாகவும் பின்னர் அப்பாதை மூடப்பட்டதும் புதுக்குடியிருப்பு ஒட்டிசுட்டான் நெடுங்கேணி வழியாக ஓமந்தை அடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வைத்தியசாலை சுழலில் தற்காலிக விடுதிகள் விரைவாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. அது தவிர உத்தியோகத்தர்கள் தங்குமிட வசதிகள் தற்காலிக குடில்கள் வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டன. இடம்பெயர்கின்ற வேளைகளில் ஓலை கிடுகளையும் மரம் தடிகளையும் தனியாரிடம் இருந்து’ கொள்வனவு செயப்பட்டதுடன் இடம் பெயர்ந்தவர்களால் கொண்டுவரப்பட்ட அரிகற்களை கொள்வனவு செய்து நிலப்பகுதிக்கு அடுக்கி கட்டிடம் தயார் செயப்பட்டது.

A6

இந்த கட்டிட வேலைகளை வைத்திய கலாநிதி சுரேந்திரன் அவர்கள் பொறுப்பேற்று பல்வேறு தரப்பினருடன் கதைத்து அவற்றை செய்து முடித்தார். வைத்தியாலை சுழல் இரவு பகலாக ஆயிரக்கணக்கானவர்களால் நிறைந்த நெருசல் மிக்க பிரதேசமாக காட்சியளித்தது அயலில் கேட்கின்ற சத்தம் பதட்டத்தை உண்டு பண்ணிய வண்ணம் இருந்தது. கடுமையான காயங்களுக்கு உட்பட்டவர்களை வைத்தியாலைக்கு எடுத்து வந்தவண்ணம் இருந்தனர். வைத்தியசாலையில் இருக்கும் வசதிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முன்னாளில் மகப்பேற்று அறையாக பயன்படுத்தப்பட்ட பகுதி தற்காலிக சத்திர சிகிச்சை கூடமாக இயங்கியது கடுமையான காயங்களுக்கு உட்பட்டவர்கள் கடுமையாக நோயிற்றவர்கள் வவுனியா செல்லும் நோயாளர் காவுவண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்ட போதும் ஒரு சிலரின் இறப்பை தடுக்க முடியவில்லை.

A5

தர்மபுரம் வைத்தியாலை இயங்கி கொண்டிருந்த வேளை விசுவமடு பாடசாலை வைத்தியசாலையும் கல்லாறு வைத்தியாசாலையும் இயங்கு நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

தர்மபுரம் வைத்தியாலை முற்சந்தி பரந்தன் கல்மடு மற்றும் புதுக்குடியிருப்பு இனைக்கும் மிக முக்கியமான சந்தியாக காணப்பட்டது. கார்திகை, மார்கழி மாதங்களில் கடுமையான வெள்ள பெருக்கு ஏற்பட்டு வாழ்விடங்கள் நீரில் முழ்கின. பாதுகாப்பான நிலவறை (பங்கர்) தூர்ந்து போயின. மக்கள் இயற்கை கடன்களை கழிப்பதற்காக மிகவும் பெரும் சிரமப்பட்டனர். உணவு பொருட்களின் விலை தற்காலிக வியாபார இடங்களில் அதிகரித்து சென்றது எல்லாவற்றுக்கு மேலாக அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பயம் எல்லோர் முகத்திலும் காணப்பட்டது………………..

 

A4A3A1A2

 

 

 

தொடரும்………….

 

 

 

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்