Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை அங்கம் – 29 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 29 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

அங்கம் – 29 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 29 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

4 minutes read

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

– வணக்கம்LONDON –

 

இவ்வாறு தர்மபுர வைத்தியசாலை நெருக்கடியான நிலையில் சேவையை தொடர்ந்த வண்ணம் இருந்தது. 2009 தை காலப்பகுதியில் பரந்தனில் இருந்து முரசுமோட்டை நோக்கி இராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருந்தது. கடுமையான குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன. அன்று ஒரு நாள் மாலை வேளை முரசுமோட்டை பகுதியில் நடந்த கடும் சண்டையில் தலையில் சுட்டு காயத்துக்கு உள்ளன நிலையில் கைது செய்யப்பட்ட சமன் புஸ்பாகுமார என்னும் இராணுவ உத்தியோகத்தர் தர்மபுர வைத்திய சாலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

தலையில் காயம் ஏற்ப்பட்டதானால் புஸ்பாகுமாரவினால் பேச முடியவில்லை இருந்தாலும் சொல்வதை விளங்கிக்கொண்டார். உடனடியாக காயத்துக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிப்பு வசதிகளும் செயப்பட்டது. தன்னுடைய பெயர் , சொந்த முகவரி, தொலைபேசி இலக்கம் என்பனவற்றை சிரமத்தின் மத்தியில் எழுத்திக்காட்டினார். அன்றைய தினமே புஸ்பாகுமாரவின் குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் அவருடைய நிலை பற்றிக் கூறினோம். அவருடைய தயார் தன்னுடைய மகனை காப்பாற்றி விடுமாறும் அழுது புலம்பினார்.

தலையில் காயம் அடைந்திருந்ததனால் அதற்குரிய சிகிச்சையை தர்மபுரம் வைத்தியசாலையில் வழங்க முடியாத நிலை இருந்தது இதனால் மேலதிக சிகிச்சைக்காக வவுனியவிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதை அவரை எம்மிடம் ஒப்படைத்த விடுதலை புலிகளுக்கு உரியவர்கள் ஊடாக அறிவித்திருந்தேன். அதே சமயம் ICRC க்கு சம்மந்தப்பட்டவர்களோடும் கதைத்து புஸ்பாகுமாரவை வவுனியவிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் ஒன்றை அனுப்பினேன்.

RDHS Office
Kilinochchi
15 January 2009.

Health Delegate
ICRC
Puthukkudirruppu.

Dear Madam,

Lance Copral H.M.Saman Puspakumara from Ugrasgahawatta, Amunukenduwa,
Ampagawatta, Weilmada needs further Neurosurgical care

Saman Puspakumara is getting treatment at Hospital. He was arrested at battle field on 4 January 2009 in Murusumoddai. He had gunshot injury on forehead with skull fracture and brain exposed.

He can talk very slowly now and he cannot do any work alone. He needs neuro-surgical care.

It would be helpful if make necessary help for his condition.

Thank you,

Yours sincerely,

Dr.T.Sathiyamoorthy
Regional Director of Health Services
Kilinochchi

இரு நாட்களின் பின்னர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை வவுனியவிக்கு அனுப்பிவைக்கும் படி கூறினார். ஆனால் அவர் கைதியாக இருப்பது பற்றி கூறினேன். என்னை சம்மந்தப்பட்டவர்களகளோடும் விடுதலை புலிகளின் உறுப்பினர்களோடு கதைத்து அவரை அனுப்பி வைக்குமாறு கோரினார்கள்.

ஒரு சில நாட்களில் புஸ்பாகுமாரவும் எங்களுடன் இடம்பெயர்ந்து விஸ்வமடு வைத்திய சாலைக்கும் பின்னர் கல்லாறு வைத்தியசாலைக்கும் காயமடைந்த பொதுமக்கள் புலி உறுப்பினர்கள் போன்றோர் இருந்த அதே விடுதியில் புஸ்பாகுமாரவும் பரமரிக்கப்பட்டார். ஏற்கனவே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிசானும் அதே விடுதியில் தங்கி இருந்தார். சிறு காயமுற்ற எழுந்து நடக்ககூடிய நிலையில் உள்ள போராளிகள் இவர்கள் இருவரையும் வந்து பார்ப்பதுடன் அவர்களுடன் கதைக்கவும் முயச்சித்தனர். சில மைகளுக்கு அப்பால் கடுமையான குண்டுச் சத்தம் கேட்டவண்ணம் இருந்தது. அங்கு சண்டை இடுபவர்கள் இங்கு வந்து அருகருகே இருப்பதை காணக்கூடியதாக இருந்தது. ஒரு சமயம் விடுதி பக்கமாக சென்று வந்தேன் அப்போது புஸ்பாகுமாரவினால் தானாக உணவை எடுத்து உண்ணமுடியாது சிறு காயமுற்ற போராளி புஸ்பாகுமாரவிக்கன உணவை கரண்டியினால் ஊட்டி விடுவதை கண்டேன்.

கல்லாறு வைத்தியசாலையில் இருந்து புன்னைநீராவி பாடசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட புஸ்பாகுமார அங்கிருந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் 2009 மாசி மாத ஆரம்ப காலத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு உரியவர்களின் அனுமதியுடன் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னாளில் புஸ்பாகுமாரவிக்கு சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

 

 

 

தொடரும்………….

 

 

dr.sathy_  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More