செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை அங்கம் – 33 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 33 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

அங்கம் – 33 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரைஅங்கம் – 33 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை

3 minutes read

2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….

முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..

 

 

10915169_10204963343736047_8430003522525607249_n

கார்த்திகை, மார்கழி மாதங்களில் விஸ்வமடு பிரதேசம் மிக செறிவான மக்கள் குடிகளை கொண்டிருந்தது. புதுக்குடியிருப்புக்கு அப்பால் ஒட்டிசுட்டான் பகுதியிலும் கிளிநொச்சியில் இருந்து தர்மபுரம் பகுதியை நோக்கியும் இடம்பெற்ற போர் நடவடிக்கையினால் மக்கள் விஸ்வமடு பகுதியை பாதுகாப்பான பிரதேசம் என கருதி அப்பகுதியை நோக்கி நகர்ந்தனர். முதற்தடவையாக விஸ்வமடு பிரதேசம் போர் தவிர்ப்பு வலயமாக (No fire zone) அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்த மக்களுக்கு தொலைவில் இருந்து கேட்ட வெடி ஓசைகள் பதட்டத்தை ஏற்ப்படுத்திய வண்ணம் இருந்தது.

விஸ்வமடு பாடசாலையில் இயங்கி வைத்தியாலை பற்றி மத்திய மாகாண சுகாதார அமைச்சுக்கு அறிவித்திருந்தோம். மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக மருந்துகளை அனுப்புமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனாலும் கையிருப்பில் இருந்த மருந்துகளை வைத்து ஓரளவுக்கு சிகிச்சை வழங்கக்கூடியதாக இருந்தது.

10552588_10204963343376038_5802558616994467017_n

விஸ்வமடு பாடசாலையில் வைத்தியாலையும் பாடசாலையும் இயங்குவதற்கு அப்போது இருந்த மருத்துவ பொறுப்பாளர், கல்விக்கழக பொறுப்பாளர் ஆகிய இருவரிடமும் ஒத்துழைப்பை கேட்டிருந்தோம். மருத்துவ சேவை முதன்மையானது என்பதால் அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு உதவி செய்தனர்.

விஸ்வமடு பாடசாலையில் வைத்தியாலை இயங்குவது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினருக்கும் (ICRC) முல்லைத்தீவு அரச அதிபருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம்.

அக் கலப்பகுத்தியில் வன்னியில் திடீர் என மழை பெய்யத்தொடங்கியது. இதனால் வைத்தியசாலையில் நீர் வசதிகளையும் மலசலகூட வசதிகளையும் நோயாளர்களுக்கும் மக்களுக்கும் செய்து கொடுப்பதில் மிகவும் சிரமத்தை எதிர் கொண்டோம். வைத்தியசாலையில் மேலதிக வசதிகளை ஏற்ப்படுத்துவதக்காகவும் மக்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றுவதற்கு முயன்று கொண்டிருந்தோம்.

இப்படியாக இடப்பெயர்வும் மருத்துவ சேவையும் தொடர்ந்த வண்ணம் இருந்தது…………………………

 

 

தொடரும்…

 

 

dr.sathy  வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து

 

 

முன்னைய அங்கங்கள்…….

 

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/

http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/

http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More