2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் முடிவுற்ற யுத்தம் பேசுகின்ற கதைகள்பல, அவற்றுள் பேசாப்பொருளாக மறைந்திருக்கும் துயரங்களும் பல. வேருடன் தூக்கி எறியப்பட்ட மக்களை வீதி வீதியாகத் தேடிச்சென்று மருத்துவம் பார்த்த மகத்தான மனிதர்கள் பற்றிய கதை இது…..வன்னி மண்ணின் மகோன்னதமான காலத்தில் மருத்துவதுறையின் எழுச்சியும் வீழ்ச்சியும் எவ்வாறு நடந்தது என கூறும் கதை இது….
முள்ளிவாய்க்கால் வைத்தியர் என அறியப்பட்ட வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி அவர்கள் கிளிநொச்சியில் பிறந்து அதேமாவட்டத்தில் கல்வி கற்று மருத்துவ பீடம் சென்றவர். வைத்தியராக வெளியேறியவர் இன்றுவரை அந்த மண்ணில் சேவைசெய்து வருகின்றார். முள்ளிவாய்க்கால் வரை தனது அர்ப்பணிப்பான சேவையால் பல உயிர்களை காத்து நின்றவர். அந்த நாட்களில் மக்களுடன் அவரும் அவருடன் இருந்த மருத்துவக் குழுவும் செய்த சேவைகள் பற்றி மனம் திறக்கின்றார் …..
இடப்பெயர்ந்த காலங்களில் தொற்று நோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது இடம்பெயர்ந்த இடங்களில் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் மேலும் பரவாமல் தடுப்பதற்கு பல தரப்பினர் தமது கடமைகளை செய்து கொண்டிருந்தனர். சுகாதார சேவையினர் மற்றும் தமிழீழ சுகாதார பணிமனையினர், திலீபன் மருத்துவ சேவை பகுதியினர், நலன் வாழ்வு அபிவிருத்தி நிறுவனத்தினர் என பலரும் சேவை செய்து வந்தனர் .
2008 ஆண்டு இறுதிப்பகுதியில் இயற்கை அனர்த்தம் இடம்பெயர்ந்த மக்களுக்கு சவாலாக அமைந்தது. அக் காலப்பகுதியில் திடீர் என்ன மாரி மழை பொழிய தொடங்கியது. இடம்பெயர்கின்ற மக்கள் முழங்காவில் இருந்து கிளிநொச்சி ஊடாக பரந்தன், தர்மபுரம், விஸ்வமடு, உடையார்கட்டு, ஆகிய பிரதேசங்களின் ஊடான பிரதான பாதையை பயன்படுத்தினார்கள். அப் பாதைகள் செப்பமிடாமல் இருந்தமையினால் மக்களை ஏற்றி கொண்டு சென்ற வாகனங்கள் புதையுண்டு பெரும் சிரமத்தை ஏற்ப்படுத்தியது.
முழங்காவில் இருந்து வன்னேரிக்குளம் வரும் பிரதான பாதையை குறுக்கறுத்து பாய்ந்த வெள்ள நீரை கடந்து வர மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். சில சமயங்களில் மக்களை ஏற்றி வந்த உழவு இயந்திரங்கள் குடை சாய்ந்து காணப்பட்டதையும் காணகூடியதாக இருந்தது. இவ்வாறு மக்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் பாதுகாப்பனது எனக் கருதும் இடங்களை அடைந்தனர்.
கிளிநொச்சி நகரில் இருந்து பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்கள் வீதி ஓரங்களிலும், வயல் வெளிகளிலும், புல் வெளிகளிலும் தற்காலிக குடிகளை அமைத்து இருந்தனர். ஒரு தடவை தர்மபுரம் பகுதியில் தங்கி இருந்த பொழுது கடுமையான மழை பொழிந்த காரணத்தினால் வயல் வெளிகளில் இருந்து தற்காலிக குடிகள் அனைத்தும் நீரில் புதைந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
இடம்பெயர்ந்தாலும் அநேக பகுதிகளில் மக்கள் காலபோக நெற் செய்கையை செய்திருந்தார்கள். ஆனால் பச்சைபசல் எனக் காட்சியளித்த வயல் வெளிகளை அண்டி இருந்த மக்கள் இடம்பெயர்ந்த வண்ணம் இருந்தமையினால் பராமரிப்பு அற்ற கால் நடைகள் வயல் வெளிகளில் புகுந்து மேய்ந்த வண்ணம் இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
அக்காலப்பகுதியில் நான் பயனித்த வன்னேரிக்குளம், இரணைமடுக்குளம், உடையார்கட்டு போன்ற பகுதிகளில் இருந்த வயல் வெளிகள் அனைத்தும் வீனாகபோவதை காணக்கூடியதாக இருந்தது.
மார்கழி மாதப்பகுதியில் தர்மபுரம், புதுக்குடியிருப்புக்கு இடைப்பட்ட பகுதிகளில் வீதிகளின் இரு மருங்கிலும் மக்கள் செறிவாக குடியேரியமையினால் அவ் வீதிகளின் ஊடான போக்குவரத்து அதிகரித்தது. அங்கங்கே பெய்த மழையினால் மேற்படி வீதிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளகியது. தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் ஊர்ந்து கூடா செல்ல முடியாத நிலை காணக்கூடியதாக இருந்தது. உடையார்கட்டு நகருக்கு சற்று முன்னராக வயல் வெளியினுடக செல்லும் பாதை மிகவும் சிரமத்தை ஏற்ப்படுத்தியது. அப்பகுதியில் மிகவும் ஒடுங்கிய பாலம் காணப்பட்டது. சுமார் ஒரு மாதங்களாக அப் பாலத்தின் ஊடான போக்குவரத்து பெரும் சிரமத்தின் மத்தியில் நடந்தேறியது.
புதுக்குடியிருப்பு நகருக்கு மிக அருகில் இருந்த பகுதி மிகவும் பல்லமான பிரதேசம் அங்கு வெள்ள நீர் நிறைந்து காணப்பட்டது.
இத்தனை சிரமங்களுக்கும் மத்தியில் வைத்தியசாலை பொருட்கள் சேவைகளை ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திக்கு நகர்த்துவதில் சிரமங்கள் இருந்து வந்தன. எமது வாகனகளும் பல இடங்களில் புதையுண்டன. நோயாளர் காவுவண்டிகள் பல இடங்களில் வெள்ளத்தின் ஊடாக திருப்பி புதுக்குடியிருப்பு அலைய வேண்டி இருந்தது. உடையார்கட்டுக்கும் விஸ்வமடு பகுதிக்கும் இடையில் பள்ளமான பகுதி ஒன்றில் நோயாளர் காவுவண்டி வெள்ள நீரினுடக மறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. வாகன சாரதி பதட்டத்தோடு மறு முனையை சென்றடைந்தார்.
இவ்வாறு இடப்பெயர்வு தொடர்ந்த வண்ணம் இருந்தது…………….
தொடரும்….
வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி | கிளிநொச்சியில் இருந்து
முன்னைய அங்கங்கள்…….
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-1/
http://www.vanakkamlondon.com/mullivaikaal-2/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-3/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-4/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-5/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-6/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-7/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-8/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-9/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-10/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-11/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-12/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-13/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-14/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-15/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-16/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-17/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-18/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-19/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-20/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-21/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-22/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-23/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-24/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-25/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-26/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-27/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-28/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-29/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-30/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-31/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-32/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-33/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-34/
http://www.vanakkamlondon.com/mullivaikkaal-story-35/