செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை பழைய கற்கால மனிதன்!

பழைய கற்கால மனிதன்!

1 minutes read

 

மனித வாழ்க்கையின் தொடக்க நிலையை பழைய கற்காலம்

என்று அழைக்கிறோம் . பழைய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் குவார்ட்சைட் எனப்படும்.
கரடு முரடான கற்களை வேட்டையாடுவதற்க்கு பயன்படுத்தினர். எனவே இக்காலத்திற்கு பழைய கற்காலம் என்று பெயரிடபட்டது. பழைய கற்காலம் சுமார்
கி.மு .பத்தாயிரம் ஆண்டுகள் வரை நீடித்தது என்று கருதலாம்.

பழைய கற்காலக் கருவிகளை தமிழகத்தின் பல பகுதிகளில்

காணமுடிகிறது. ராபர்ட் புரூஸ் பூட் என்பவர்தான் முதன் முதலில் இத்தகை கருவிகளை சென்னைக்கு அருகில் இருக்கும் பல்லாவரத்தில் கண்டறிந்தார். பின்னர் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களிலும் இத்தகைய கருவிகள் கண்டறியப்பட்டன.

சென்னையை அருகில் இருக்கும் கொற்றலையாற்றின் சமவெளியிலும், வட மதுரையிலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடரிகள் மற்றும் சிறிய கற்கருவிகள் கிடைத்துள்ளன. இத்தகைய கண்டுபிடிப்புகளினால், தமிழ்நாட்டில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்தனர் என்பது தெளிவாகிறது.

பழைய கற்கால மக்கள் உணவைத்தேடி அலையும் நாடோடி வாழ்க்கை முறையை
மேற்கொண்டனர் .” கனிகள், காய்கள், கிழங்குகள் மற்றும் விலங்குகளின் இறைச்சிகள் இவர்களது முக்கிய உணவுப்பொருள்களாகும்”. கொடிய விலங்குகளிடமிருந்தும், கடும்
வெப்பத்திலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காக இவர்கள் குகைகளில் வாழத் தொடங்கினர். விவசாய முறைகளை இவர்கள் அறிந்திருக்கவில்லை.

தொடக்கத்தில் ” ஆடைகள் இன்றித்திரிந்த ” பழைய கற்கால மனிதன் பின்னர் இலைகள், மரப்பட்டைகள் மற்றும் விலங்குகளின் தோல்கள் போன்றவற்றால் ஆன ஆடைகளை அணிந்தனர். இவற்றால் கடுங்குளிரிலிருந்தும், கடும் வெப்பத்திலிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டனர்.

இரண்டு சிக்கி முக்கி கற்களை உராசுவதன் மூலம் பழைய கற்கால மனிதன் நெருப்பை உருவாக்கினான் . மிருகங்களை அச்சுறுத்தி விரட்டியடிக்கவும் .இறைச்சியை வதக்கி உண்பதற்கும், குளிரிலிருந்து தங்களை காத்து கொள்வதற்கும் நெருப்பைப் பயன்படுத்தினர்.

பழைய கற்கால மனிதன் தான் வாழ்ந்த குகைளில் அழகான ஓவியங்களை தீட்டினான் . அவற்றில் யானை, கரடி, மான் போன்ற மிருகங்களை வேட்டையாடும் ஓவியங்கள் மற்றும் தங்களது வாழ்க்கை முறையை சித்தரிக்கும் ஓவியங்களையும் தீட்டினான் ,

இறைவன் அல்லது சமயம் குறித்த சிந்தனை பழைய கற்கால மனிதர்களுக்கு இல்லை. இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறைகளையும் கூட இவர்கள் அறிந்திருக்கவில்லை. இறந்தோரின் உடல்கள் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இறையாகவே
பயன்பட்டன.

 

நன்றி : தமிழ் தாமரை

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More