செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை “தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -5 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -5 | வதிலைபிரபா

2 minutes read

கட்டுரையாளர் – வதிலைபிரபா

தொடர் கடிதங்கள் தந்த உற்சாகம் மகாகவியின் செயல்திறனை இன்னுமென முடுக்கி விட்டன.

முதுபெரும் இதழாளர் வல்லிக்கண்ணன் “மகாகவி நல்ல வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்று வருவது மகிழ்ச்சிக்குரியது. அந்த உற்சாகமும் ஊக்குவிப்பும் மகாகவிக்கு சத்துணவாக இருக்குமென நம்புகிறேன்” என்றெழுதினார்.”மகாகவி தரமிக்க இதழ்” என்று தோப்பில் முகமது மீரான் எழுத, “மகாகவி தன்னை மீள்பரிசீலனை செய்து தொடர வேண்டும்” என்றார் பொள்ளாச்சி நசன். “துட்டிலக்கியம் மிக விரிவான முறையில் ஆராயப்பட வேண்டிய நுட்பமான இலக்கியம்.(!) அதைப் போய் அரைப்பாக்கத்தில் முடித்து விட்டீரே!” என்று ஆதங்கப் பட்டார் ஆற்காடு தீபன்.

வந்த கடிதங்களில் சுதி மானசீகன் கடிதம் சற்று சூடாக இருந்தது. கொஞ்சம் கோபமும் கலந்திருந்தது. “துட்டிலக்கியம் பற்றி இன்னும் உங்களுக்குத் தெளிவான பார்வை தேவையாயிருக்கிறது. . உங்களுக்கே ஐயப்பாடு உள்ளதெனக் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். பின் ஏன் எழுத வேண்டும். இலக்கியம் குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கியதுதான். உதாரண புருஷர்களை வைத்துக் கொண்டு துட்டிலக்கியர்கள் என்ற நாமகரணத்தை அனைவருக்கும் சூட்ட நினைப்பது வேதனையளிக்கிறது. மக்களுக்காகவே இலக்கியச்சேவை ஆற்றக்கூடிய சிறந்த படைப்பாளிகள் நம் பக்கத்தில் இல்லாமலில்லை. இக்கால இலக்கியம், பண்டைக்கால இலக்கியம், இடைக்கால இலக்கியம், காப்பிய இலக்கியம் போன்றவற்றை நன்கு படித்துப் பாருங்கள். எழுதுங்கள். தமிழுக்குச் சோறுபோட நினைக்கும் நாலாம்தர இலக்கிய விற்பனர்களுக்கு வேண்டுமானால் துட்டிலக்கியம் பொருந்தும்.” என்றார். நாம்தான் எப்படி இதை மறுதலிக்க முடியும். ஆக, இப்படி இருவேறு கோணங்களில் துட்டிலக்கியம் பேசுபொருளானது.

என்னய்யா கடிதம் எழுதி என்ன பயன் என்று நினைத்தாரோ ஒருவர் நேரில் வந்தார். விவாதித்தார். எழுதுவேன் என்றார். எடிட் செய்யாமல் போடுங்கள் என்றார். ஆக, துட்டிலக்கியம் “சிற்றிதழ் மோசடிகள்” என்ற கட்டுரையாக புதிய பரிமாணம் எடுத்தது. இதிலென்ன தயக்கம். போடுவோமே என்று அந்த இரண்டு கட்டுரைகளையும் வெளியிட்டேன். கட்டுரையாளரோ தன் பெயரை மௌன தீபன் என வைத்துக்கொண்டு ஆவேசமாகப் பொரிந்து தள்ளினார் தம் எழுத்துகளில்.

சின்னக் குமுதங்கள், துட்டிலக்கியம் எனத் தொடர் அதிர்வுகளைத் தொடர்ந்து மகாகவி இதழில் “சிற்றிதழ் மோசடிகள்” என்கிற இந்தக் கட்டுரைகளும் பேரதிர்வைத் தந்தன. மௌன தீபன் எழுதிய இந்தக் கட்டுரை துட்டிலக்கியம் கட்டுரையின் தொடர்ச்சிதான். மகாகவி இதழ் ஆசிரியர் வதிலைபிரபாவை நேரடியாகச் சந்தித்த மௌன தீபன் இதுகுறித்து விவாதித்தார். அவருடைய கேள்வி துட்டிலக்கம் சிற்றிதழ்களுக்குப் பொருந்துமா என்பதே! அதாவது அதன் தொடர்ச்சியை சிற்றிதழ்களில் பொருத்திப் பார்க்க விரும்புவீர்களா என்பதே. ஏனில்லை எழுதுங்கள் என்றேன். எழுதினார். அவரது இரண்டு கட்டுரைகள் அடுத்தடுத்த இதழ்களில் பிரசுரமானது.

வதிலை பிரபா, கவிஞர் மற்றும் சிற்றிதழ் ஆசிரியர்

முந்தைய தொடர்கள்

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் -4 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” | தொடர் – 3 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 2 | வதிலைபிரபா

தமிழ்ச் சிற்றிதழ்கள் | எழுச்சியும் வீழ்ச்சியும் | தொடர் 1

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More