ஈழத்தின் மூத்த பொருளியல் விஞ்ஞானியாக அறியப்பட்ட பேராசிரியரும் இலக்கிய கலாநிதியுமாகிய நா.பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த 14ம் திகதி காலமாகிவிட்டார்.
ஒரு சிறந்த ஆசான், நிர்வாகி, ஆராய்சியாளன் இவற்றை எல்லாம் விட பெருந்தன்மை பாராத எளிமையான நல்ல மனிதர். யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை பேராசிரியராகவும் வவுனியா வளாகத்தின் முதல்வராகவும் கடமையாற்றியவர். இலங்கையின் பொருளியல் அறிஞரான இவரது திறமையைப் பாராட்டி பொருளியல் விஞ்ஞானி என அழைக்கப்பட்டார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இவரது ஆலோசனைகள் பெரும் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் இறக்கும் பொது வயது 78 ஆகும்.