Thursday, February 22, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் | புகைப்படங்கள் இணைப்பு கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் | புகைப்படங்கள் இணைப்பு

கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் | புகைப்படங்கள் இணைப்பு கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் | புகைப்படங்கள் இணைப்பு

6 minutes read

ஆபிரகாம் லிங்கன்:

ஆபிரகாம் லிங்கன் (பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர்ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்

ஜேம்ஸ் கார்ஃபீல்ட்:

ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்.

பத்திரிசு லுமும்பா:

பத்திரிசு எமெரி லுமும்பா (ஜூலை 2 1925 – ஜனவரி 17 1961) ஆபிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்

ஆங் சான்:

ஜெனரல் ஆங் சான் பெப்ரவரி 13 1915 – ஜூலை 19 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர் தேசியவாதி இராணுவ மேஜர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார்

இந்திரா காந்தி:

இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். பிறப்பு நவம்பர் 19 1917அலகாபாத் உத்தரப் பிரதேசம்ஜனவரி 19 1966 இல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.அக்டோபர் 31 1984 இல் சீக்கியர்களான அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

முகமது நஜிபுல்லா:

நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 – செப்டம்பர் 27 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,):

இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன் இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.

சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman):

சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர்.

ராஜீவ் காந்தி (Rajiv Gandhi):

ராஜீவ் காந்தி (பிறப்பு ஆகஸ்ட் 20 1944 – இறப்பு மே 21 1991)இ இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இவர் 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (Sir Abdullah I bin al-Hussein):

(சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் (1882 – ஜூலை 20 1951) ஜோர்தான் நாட்டின் மன்னராக 1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக (1921-1946) இருந்து பின்னர் மே 25 1946 முதல் 1949வரை அதன் மன்னராகவும் இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற ஜோர்தானின் மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான் நாட்டை அமைத்த சிற்பி எனப் போற்றப்படுகிறார். ஜூலை 20 1951 இல் அப்துல்லா ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதியில் வெள்ளிக்கிழமை ஆராத்ஹனையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

மரீ பிரான்சுவா சாடி கார்னோ:

மரீ பிரான்சுவா சாடி கார்னோ ஆகஸ்ட் 11 1837 – ஜூன் 25 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசின் நான்காம் அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலை செய்யப்படும் வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார்.ஜூன் 24 1894 இல் லியோன் என்ற இடத்தில் ஒரு பொது மேடையில் உரையாற்றும் போது ‘சான்டெ கசேரியோ’ என்ற இத்தாலிய அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகாயமடைந்து அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார்.

நன்றி : இன்று ஒரு தகவல் இணையம் | கரை செல்வன்

 

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More