March 29, 2023 12:33 am

மன்னார் சாந்திபுர கிராம பாடசாலை புனர் நிர்மானம்மன்னார் சாந்திபுர கிராம பாடசாலை புனர் நிர்மானம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கடந்த பத்து வருடங்களாக கார்த்திகையில் ஏற்படும் மழை காரணமாக சாந்திபுர அரசினர் தழிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த  200 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களும் 8 ஆசிரிரியர்களும் தமக்கு வழங்கப்பட்ட மலசல கூடங்களைப் பாவிப்பதற்கு இரண்டு அடி உயரமுள்ள வெள்ளத்தினுடாக சென்று வரும் நிலைகாணப்பட்டது.

A1

A3

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் வேண்டுதலுக்கமைய மன்னார் பிறிச்சிங்;லங்கா இவர்களது பாவனைக்காக 250 அடி நிளம் 2 அடி உயரமுள்ள நடைபாதையை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது இது வரை 80 வீதம் மான வேலை முடிவுற்றுள்ளது.

மேலும் இப்பாடசாலையின் சுற்றுவேலி பழுதடைந்து காணப்படுவதால் நூற்றுக்கணக்கான கட்டாக்காலி மாடுகள் பாடசாலை வளாகத்திலும் உட்புரத்திலும் அசிங்கப்படுத்துவதினால்  தினமும் ஆசிறியர்களும் மாணவர்களும் சாலைகளையும் சுற்றுப்புரத்தினையும் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுவதினால் பெறும் சிரமத்துடன் பாடநெறிகளும் உரிய முறையில் நடைபெறாமல் தடங்கல் ஏற்படுகின்றது.

A2

பாடசாலை அதிபரின் வேண்டுகோலுக்கமைய பிறிச்சிங்லங்கா பாடசாலைகட்டிடத்தை உள்ளடக்கிய சுற்று வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

இவ்வேலிக்கான கட்டுமானப் பணிகளை அருகமையிலுள்ள இரானுவத்தினர்  மூலம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

திரு. சின்கிலேயர் பீற்றர் | மன்னாரிலிருந்து வணக்கம் லண்டனுக்காக

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்