இப்பிரதேசத்து இடப்பெயர்களின் ஆய்வு ஒன்பது இயல்களில் விரிவாக இந்நூலில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேற்கண்ட இரு நூல்கள் தந்த விடயங்களையும் பிற ஆய்வுகளையும் உள்ளடக்கியதாக, பின்னாளில், ஈழத்து இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். என்றவொரு நூல் கனடா, தமிழர் செந்தாமரை வெளியீட்டக வெளியீடாக 2002 இல் வெளிவந்திருந்தது.
பிரதேச வரலாற்றுக் கூறுகள் பயண இலக்கியங்களுக்குள்ளும் பொதிந்து கிடக்கின்றனவாயினும், அவை ஒரு பிரதேசத்தின் வரலாற்றை, வாழ்க்கை முறைகளை அந்நியப்பார்வை கொண்டு பார்த்து வியக்கும் அல்லது பெருமிதம் கொள்ளும் பாங்குடையவையாகும். இலங்கையில் தமிழர்களின் வரலாறுகளை நாம் ஆதாரபூர்வமாக நிரூபிக்க இன்றும் சீன யாத்திரீகர்களினதும், ஐரோப்பியரினதும் கீழைத்தேய மேலைத்தேய பயணிகளின் நாட்குறிப்புகளிலும் இருந்தும் ஆதாரங்களைத் தேடி வந்திருக்கிறோம் என்ற வகையில் எமது மண்ணின் பிரதேச வரலாற்றை ஆராய்வதற்கு இத்தகைய வரலாற்றாதாரங்களும் முக்கியமாகும். இதற்குச் சுவையான ஆதாரமொன்றைக் குறிப்பிடலாம்.
நியூசிலந்தில் தமிழன் பதித்த சுவடுகள் என்ற நூல் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் பிறந்த ஆ.தா.ஆறுமுகம் அவர்களால் எழுதப்பட்டு நியுசிலாந்து வெலிங்ரன் தமிழ்ச் சங்க வெளியீடாக 2007இல் வெளிவந்தது. தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் 1985இல் முஃஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் அதிபராகவிருந்து ஓய்வுபெற்றவர். தற்போது நியுசிலாந்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். நியுசிலாந்தின் வெலிங்டன் தொல்பொருளகத்தில் (ஆரளநரஅ) காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் பொறித்த மணியைப் பற்றிய விரிவான ஆய்வு இதுவாகும். வுயஅடை டீநடட என்ற பெயரில் இவ்வரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த மணி “முகையயதினவககுசுஉடையகபலஉடையமணி” என்று புடைப்பு (நஅடிழளள) எழுத்துடன் வார்க்கப்பட்டுள்ளது. இது தமிழரின் கடற்பிரயாணம் 15ம் நூற்றாண்டில் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதையும், இம்மணிக்கும், இங்கு புதையுண்டுள்ள ஒரு மரக்கலத்திற்கும், ஊhசளைவஉhரசஉh என்ற பகுதியிலுள்ள குகை ஓவியங்களுக்கும் தொடர்புள்ளதாகவும் இவர் தன் ஆய்வின்மூலம் வெளிப்படுத்த முனைகின்றார்.
மேற்கண்ட நூலுடன் வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள் என்ற தலைப்பில் ஈ.கே.ராஜகோபால் (இயற்பெயர்: இளையதம்பி குமாரசாமி ராஜகோபால்) எழுதி யாழ்ப்பாணம், கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் அமைப்பினால் 1984இல் வெளியிடப்பட்ட மற்றுமொரு நூலையும் குறிப்பிடவேண்டும்;. 1930ம் ஆண்டளவில் இலங்கை வடபுலத்தின் கரையோரப்பகுதியான வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் குளொசெஸ்டர் துறைமுகத்துக்குச் சென்றடைந்த அன்னபூரணி கப்பலின் பிரயாண வரலாறு இந்நூலாகும்.
இவையிரண்டும் ஒன்றுக்கொன்று நேரடித் தொடர்பற்ற நூல்கள். ஆனாலும், மேற்சொன்ன இவ்விரு நூல்களும் வல்வெட்டித்துறை மண்ணின் கப்பல்கட்டும் தொழிலின் வரலாற்றுப் பெருமையை தொடர்புபடுத்துவதால், பிரதேச வரலாற்றாய்வாளர்களுக்கு முக்கியமான நூல்களாகக் கருதப்படலாம்.
ஒரு பிரதேச வரலாற்றை எழுதப்புகும் ஒருவர் நிச்சயமாக அந்த மண்ணின் மைந்தனாக இருக்கவேண்டியது கட்டாயமல்ல. ஆயினும் அத்தகையதொரு மண்ணின் மைந்தனால் எழுதப்படும் பிரதேச வரலாறுகள் அதிக உள்வீட்டுத் தகவல்களைத் தரும் என்ற வகையில் ஆழமானதாக அமைய வாய்ப்புள்ளது. அதே வேளையில், தாய்மண் பற்றிய அவரது பார்வை உணர்வுபூர்வமாக அமைந்து சமநிலை தவறிவிடும் ஆபத்தும் உள்ளது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.
இன்று எமது பாரம்பரிய பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களாலும், இராணுவக் குடியிருப்புகளாலும் கையகப்படுத்தப்பட்டு பாரம்பரியமாக வழங்கிவந்த ஊர்ப்பெயர்களே மாற்றம் கண்டுவருகின்றன. புவியியல்ரீதியான குடித்தொகைப் பரம்பல்கள் திட்டமிட்டவகையில் படிப்படையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. எம் கண்முன்னேயே கையறு நிலையில் இவை அரங்கேறுகின்றன. இந்நிலையில் எமது பாரம்பரியப் பிரதேசங்களின் வரலாறுகள் எதிர்காலச் சந்ததியினருக்காக பதிவுசெய்யப்படவேண்டிய தேவை அழுத்தமாக உணரப்பட்டு வருகின்றது. அதன் ஒரு புலப்பாடே அதிக அளவில் பிரதேச வரலாற்று நூல்களின் அண்மைக்கால வருகையாகும்.
ஈழத்தில் எழுந்த பிரதேச வரலாற்று நூல்கள் பற்றிய விரிவான தேடலொன்றை மேற்கொண்டு வரும் நிலையில் அவை பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் பரந்த அடிப்படையில் தமது தேடலை விரிவாக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புடையவர்களாக உள்ளனர். அவர்களுக்கு உதவும் தேடற்புலங்களை அடையாளம் காட்டுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
நிறைவு…
நன்றி : என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் | பதிவுகள் இணையம்