இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர்,...
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது.
முன்னணியின் தலைவர்...
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று...
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த...
அமெரிக்கன் இலங்கை மிசனரிகளால் (American Ceylon Missionaries) 1847 ஆம் ஆண்டு கிறீன் மெமோரியல் ஆஸ்பத்திரி (Green Memorial Hospital) மானிப்பாயில் (Manipay) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆஸ்பத்திரி சாமுவேல் பிஸ்க்...
தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கர்ணன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி...
கொரோனா இரண்டாவது அலை காரணமாக சாய்பல்லவி நடித்துள்ள படத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.சாய் பல்லவிநாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள்...
விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் அமீர் கான் விலகியதற்கான உண்மைக் காரணம் வெளியாகி உள்ளது.விக்ரம் வேதா படத்தின் போஸ்டர், அமீர் கான்மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில்...

எங்கள் பண்பாட்டின்
ஆன்மீக அடையாளமாய்
நிமிர்ந்த நல்லூர் முருகா!
நின்
பெருந்திருவிழா அழகில்
நெஞ்சு நிமிரும் நாளுக்காய் காத்திருந்தோம்
இன்று
நின் தரிசனம் காண
அடையாள அட்டை
இன்னுமின்னும் பற்பல நிபந்தனைகள்
அந்தக் கிருமிக்கு அவ்வளவு வல்லமையா…
650 பேர் சோதனை செய்து
300 பேருக்கு...
ஆடியமாவாசை…
பிண்டமாய் போன
அப்பாவுக்கு
கண்ணீரில்
எள்ளுத் தண்ணி
இறைத்த என் இடம் நிரப்ப
வருவான் ஒரு பாலன்….
அப்பா பெயர், நட்சத்திரம்
மழலையாய் உதிரும்
இந்த வயதில்
இவனுக்கு ஆடியமாவாசை
எந்தன் கண்ணீரும் உறையும்
‘தகப்பனைத் தின்னி’
பிள்ளையின்
எள்ளுத் தண்ணீராய்
கண்ணீரைத் தந்தபடி
கூட இருந்த
தாய் விளக்கம்…
‘அவர் காணாமல் போகையில்
இவன் வயிற்றில்…
தேடுறம் தேடுறமெண்டு…
இனித்...
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.
இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி...
காலம்
இங்கே
காலம் மூன்றல்ல; ஒன்றே ஒன்று
காலங்களுக்கு அப்பாலான காலம்
இங்கே
இன்று பிறந்த இன்றும்
நாளை பிறக்கும் நாளையும்
பிறந்ததுமே
இறந்த காலத்துக்குள் ஒடுங்குகின்றன
இங்கே
அன்றாடம் உதிக்கும் சூரியன்
முதன்முதல் உதித்ததுபோலவே உதிக்கிறது
முதன்முதல் மறைந்ததுபோலவே மறைகிறது
இங்கே
காற்றில் எம்பும் புழுதிச்சுழலில்
யுகங்களுக்கு முன்பே மலர்ந்த பூவின்
மகரந்தம் மிஞ்சியிருக்கிறது.
இங்கே
ஒசிந்து பெய்யும் மழையில்
முதலாவது மேகத்தின்
உலராத ஈரம் தேங்கியிருக்கிறது.
இங்கே
பிரபஞ்சத்தின் சுவாசத்தால் சிலிர்த்தோடும் நதியில்
ஆதி நாடோடியின்
உமிழ்நீர் ஊறிச் சுவைக்கிறது.
இங்கே
மரங்களிருந்து கேட்கும் பறவைக் குரல்களில்
மொழிக்கு முந்திய மௌனத்தின் வார்த்தைகள்
எழுத்துக் கூட்டி உச்சரிக்கப்படுகின்றன
இங்கே
குறுகிய சந்துகளில் பதியும் புதிய காலடிகளின்கீழ்
ஆயிரமாயிரம் அறியாச் சுவடுகள் புதைந்திருக்கின்றன
இங்கே
முதலாவது கங்குதான் கனன்று கனன்று
உயிரின் சுடராக அலைந்து அலைந்து இன்னும் எரிகிறது
இங்கே
வாழ்வின் வேட்கைக்கு மரணம் காவலிருக்கிறது
சாவின் கொள்ளிகளுக்கு இடையில் வாழ்க்கை புன்னகைக்கிறது.
இங்கே
மனிதர்கள் வந்துபோவது
இன்றை விருந்தோம்பவோ
நாளையை வரவேற்கவோ அல்ல
இறந்த காலத்தில் புகலடைய
ஏனெனில்
வாராணசியில் காலம் ஒன்றே ஒன்று
காலங்களைக் கடந்த காலம்.
உஸ்தாத்
கதவுஎண்சி.கே. 46 / 62,
ஹராகாசராய், வாராணசி.
மேற்குறிப்பிட்ட முகவரி இல்லத்தில்
பிஸ்மில்லா கான் இல்லை
ஆனால்
அந்த வீட்டில்தான் அவரைப் பார்த்தேன்
குறுகிய வரவேற்பு அறை மூலையில்
அவருடைய காலணிகள் இல்லை
ஆனால்
தாளகதியுடன் நகரும் இரண்டு பாதங்களை
அந்த மூலை அருகில்தான் பார்த்தேன்
கூடத்தின் தரையில் செவ்வண்ண ஜமக்காளத்தின் மீது
அவர் உட்கார்ந்திருக்கவில்லை
ஆனால்
சுருதி பிடித்து மகா குரு ஸ்வரம் கற்பிப்பதை
ஜமக்காளத்தின் மறுமுனையில் அமர்ந்துதான் பார்த்தேன்
ளுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தும்
அறைக்குள் அசைவில்லை
ஆனால்
இருகை உயர்த்தி இறைஞ்சும் குல்லா அணிந்த நிழல்
அந்த மேற்குச் சுவர்மேல் அசைவதைப் பார்த்தேன்.
காட்சிப் பேழைக்குள்
வரிசையாக மௌனித்திருந்த குறுங்குழல்கள்
அப்போது உயிர்பெற்று விம்முவதைக் கேட்டேன்
விழிபனிக்க நிலத்தில் மண்டியிட்டு வணங்கி நிமிர்ந்தேன்
ஒரு முதிய ஆள்காட்டி விரல்
கண்துளிர்ப்பைத் துடைப்பதைக்
கண்ணி்மைக்காமல் பார்த்தேன்
அந்த விரலை முகர்ந்தபோது
பனாரசி பானின் வாசனையும்
கங்கையின் குளிர்ச்சியும்
மண்ணின் சொரசொரப்பும் இருந்தன.
வானத்தின் தழுதழுப்பும் இருந்தது.
முக்தி
காசிக்கு வந்தால்
அதி விருப்பமானதை
இங்கேயே கைவிட்டுப் போவது மரபு.
மரபுக்கு அஞ்சி
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகிறார்கள்
சிலர் அம்மாக்களை
சிலர் பிள்ளைகளை
சிலர் மனைவிகளை
சிலர் கணவர்களை
சிலர் காதலிகளை
சிலர் அநாதைகளை
சிலர் ரட்சகர்களை
இவ்வாறு கைவிடப்பட்டவர்களால்
நகரம் நெரிபடுகிறது.
சிலர் ஆடுகளை
சிலர் மாடுகளை
சிலர் குதிரைகளை
சிலர் மயில்களை
சிலர் பன்றிகளை
சிலர் குரங்களை
சிலர் காகங்களை
இவ்வாறு கைவிடப்பட்டவையால்
தெருக்கள் முட்டிக்கொள்கின்றன.
சிலர் ஆடைகளை
சிலர் ஆசைகளை
சிலர் மலர்களை
சிலர் நம்பிக்கைகளை
சிலர் பிணங்களை
சிலர் சாம்பற்குடங்களை
சிலர் ஆவிகளை
இவ்வாறு கைவிடப்பட்டவற்றால்
படித்துறைகள் திணறுகின்றன
சிலர் ருசியை
சிலர் காட்சியை
சிலர் கேள்வியை
சிலர் மணத்தை
சிலர் தொடுகையை
சிலர் உணர்வை
சிலர் அறிவை
இவ்வாறு கைவிடப்பட்டவையால்
கங்கை விம்முகிறது
சிலர் கனவை
சிலர் நம்பிக்கையை
சிலர் காமத்தை
சிலர் மோகத்தை
சிலர் ஞாபகத்தை
சிலர் தேகத்தை
சிலர் ஆன்மாவை
இவ்வாறு கைவிடப்பட்டவற்றால்
விசுவநாதன் தடுமாறுகிறான்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றைக் கைவிட்டுப் போகும்போது
கையோடு காசியையும் கொண்டு போகிறார்கள்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொருமுறையும்
காசியை நினைக்கும்போதும்
கைவிட்டவையும் கூடவே வராதா?
காசியையும் கைவிடுவதுதானே கதி மோட்சம்?
சுடர்கள்
பல்லாயிரம்கோடிக் கைகள் கற்பகோடிக் காலம்
தொட்டுத் தழுவி உயிரூட்டிய
நம்பிக்கைக் கல்லை நலம்விசாரித்து
ஆலய வாசலில் வந்து அமர்ந்தேன்.
ஒட்டி அமர இடங்கேட்டு முன்னால் நின்றவனுக்குப்
பனித்த சடை, பவளமேனியில் பால்நிறச் சாம்பல்,
குனித்த புருவம், கோணற்சிரிப்பு,
இடது பொற்பாதத்தில் பித்த வெடிப்பு.
உடல்நகர்த்தி உட்கார இடம் கொடுத்தேன்
கைவச உணவில் கொஞ்சம் கொடுத்தேன்
யுகப்பசியுடன் விழுங்கிய பின்பு
‘மந்திர் மேம் மூர்த்தி; பாஹர் ஹை ஈஸ்வர்’ என்று
ஊழி ஏப்பமிட்டு கனிவாகச் சிரித்தான்.
கங்கையில் மிதக்கவிடப்
பெண்கள் கொண்டுசெல்லும் அகல்களில்
அழியாச் சுடர்களைப் பார்த்தேன் அப்போது.
சுகுமாரன்
நன்றி - கனலி
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் 45 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.
நா. முத்துகுமார் இன்று இல்லை என்றாலும் அவர் தந்துவிட்டு சென்ற பாடல்கள் நீங்கா நினைவலைகளால் இடம்பிடித்துள்ளன.
சுமார் 1500 திரைப்பாடல்களையும், நூல்களையும் எழுதியுள்ள இவர்...
அன்பே நான் பயணப் படுகையில்
'கவனமாய் பார்த்து வா' என்கிறாய்
கவனம் என்ற சொல்லில்தான் வாழ்வின் ஆயுள் சுழல் வதை அறிவேன் நான்
கவனத்தைச் சூடுதல் சுகங்களின் தொடக்கம்
கவனத்துக்கும் நமக்கும் கவனம் பற்றிய தவிப்புக்கள் ஏராளம்
கவனமா படி
கவனமா...
கடைசி ஆயுதத்தையும்
ஐயா கையில
எடுத்துப் பார்த்தார்
சமரச அரசியலோடு
சமாதானம் வரும் என்று
சிங்கக் கோ(கொ)டியை
உயர்த்திப் பிடித்தார்
ஐயா பாவம்
இப்போ வெறும்
கையோடு நிற்கிறார்
அடுத்த தேர்தலைப் பார்த்தபடி
அது சரி
அவன் கொடுத்தா தானே
ஐயாவும் வேண்டித் தருவார்
சும்மா சொல்லுங்கோ ஐயா
தீபாவளிக்குள் தீர்வு
கிடைக்கும் என்று
பாவம் சனம் நம்பி வந்து
வாக்குப் போடும்
ஏமாந்தே பழகப்பட்ட
சனம் நாங்க ஐயா
இந்தியா வரும் என்றே
இருந்த சனங்க நாங்க ஐயா
ஆன அவனும் இவனும்
முழுசா தின்று முடிச்சான்
முள்ளிவாய்க்காலை ஐயா
இன்னும் ஒரு முறை
ஏமாறுவதில்
என்ன குறை ஐயா
புலிகள் போனால்
சமாதானம் வரும்
என்ற சனத்தையும்
சந்திச்சுப் பாருங்க ஐயா
மாற்று வழி ஏதும்
கேட்டுப் பாருங்கோவன்
மசியுமா சிங்களம் என்று.
பா.உதயன்
அவள் அப்படிக் கேட்டுவிட்டாள் என்பதற்காக மனைவியிடம் சொல்லியிருக்கக்கூடாது.அதனை எப்படி எடுத்துக்கொள்வாளோ?ஒருபெண் கேட்டதை இவளிடம் சொல்லி என்னைப் பற்றிய அபிப்பிராயத்தைப் புரட்டிவிடப்போகிறதோ தெரியவில்லை.'
மனதுள் புழுங்கினான்.
மணியமென்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சுதந்திரபுரத்தில் பலசரக்குக் கடை வைத்திருப்பவன்..அவனின் மனைவி...
நாங்கள் கனவழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் வாழ்வு அழிக்கப்பட்ட மக்கள்
நாங்கள் நாடழிக்கப்பட்ட மக்கள்
இப்பொழுது நாங்கள் கொடியும் பாடலும் அற்ற மக்கள்.
எங்களுக்கு ஒரு கனவு இருந்தது
எங்களுக்கு ஒரு வாழ்வு இருந்தது
எங்களுக்கு ஒரு நாடு இருந்தது
அப்பொழுது எங்களுக்கு ஒரு...
சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு வாதம், இன்று...
இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவிற்கு அனுப்பப்படவுள்ளதாக ரஷ்யாவிற்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ்வர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர்,...
மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது.
முன்னணியின் தலைவர்...
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று...
கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த...
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப் பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்களை முழுமையாக மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த...