March 26, 2023 10:19 pm

நிறைசூழ் உண்டியல் | வில்லரசன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தோழனே !
உனது தந்தையும்
எனது தந்தையும்
ஒவ்வொரு ஆண்டும் வாங்கித்தருகிறார்கள்
புதிய உண்டியல்களை

நிறங்களில் ஜொலிக்கும்
புதிய உண்டியல்களை
வருடம் முழுவதும்
நிரப்பி கொள்கிறோம்
அவரவர் கனவுகளால்

ஆண்டின் நிறைவில்
நிறைசூலாகியிருக்கும் உண்டியல்களுடன்
நீ நகர்ந்துகொண்டிருக்கிறாய்
புதிய உண்டியல்களை
வாங்குவதற்காய்..

அம்மாவின் செலவுக்கும்
அப்பாவின் மருந்துக்குமென
அவசரத்தில் கிழிக்கப்பட்ட
எனது உண்டியல்
கவனிக்கப்படாமல் கிடக்கிறது
கொல்லைப்புறத்தில்.

வில்லரசன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்