நாம் பணிநீக்கம் செய்யப்போவதில்லை என்று அறிக்கை வெளியிட்டிருந்த கூகிள் இன்று பணிநீக்க அறிவிப்பை விடுத்துள்ளது
உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை அனைத்து துறைகளையும் அடித்து சாப்பிட்ட வன்னம் உள்ளது அதில் சிக்கி தவிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் தமது வேலையாட்களை குறைத்த வன்னம் உள்ளது அதில் முதல் பிள்ளையார் சுழி போட்டவர் Mr .எலன் மாஸ்க் இவர் அக்டோபர் 27 ஆம் திகதி 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு ட்விட்டரை வாங்கியிருந்தார்.தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்குள் வேலையாட்கள் 4000 பேரை பனி நீக்கம் செய்தார்.
மேலும் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் வர்த்தக வட்டாரத்தில் கதை ஒன்டு உருண்டோடிக்கொண்டு தான் உள்ளது.
இவை இப்படி இருக்க face book,watsup,இன்ஸ்ட்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா 13000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தனது வேலையாட்களை 11 ஆயிரமாக குறைத்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் 2022 வரையிலான ஆட்குறைப்பு என 1000 பேரை பணிநீக்கம் செய்த்துள்ளது axios report கூறியுள்ளது
இவ்வாறாக உலக பணக்காரர் தமது நிறுவனத்தின் செலவீனங்களை குறைக்க ஆட்குறைப்பு நுட்பத்தை கையில் எடுத்துள்ள நிலையில் அந்த வரிசையில் ஸ்னாப் நிறுவனம் 6400 பேரை வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாகவும் பைஜிஷ் 25000 பேரை வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
layooffs .fyi இணையதள வெளியீட்டு விபரங்களின் படி 1 .2 லட்சம் பேர் இது வரை வேலை இழந்து உள்ளனர்.
இவை எல்லாம் இப்படி இருக்க இவர்களின் வரிசையில் கூகுளும் 10000 ஊழியர்களை தமது செலவீனங்களை குறைக்க பணிநீக்கும் செய்துள்ளது.