இங்கிலாந்து முழுவதும் உள்ள இளம் வைத்தியர்கள் இன்று (11) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இப்போராட்டம், எதிர்வரும் 4 நாட்களுக்கு முன்னேடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கும் மருத்துவ சங்கத்துக்கும் (British Medical Association) இடையே முன்னேடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தமையை அடுத்து, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சுமார் ஒரு மாத காலப்பகுதியில் இங்கிலாந்து இளம் வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த 15 வருடங்களாக குறைந்த பணவீக்க சம்பள உயர்வை ஈடுசெய்ய 35% சம்பள உயர்வுக்கு இங்கிலாந்து மருத்துவ சங்கம் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இளம் வைத்தியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, சுமார் 175,000 வெளிநோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், இளம் வைத்தியர்களின் தற்போதைய வேலைநிறுத்தம் “குறிப்பிடத்தக்க இடையூறுகளை ஏற்படுத்தும்” என்று இங்கிலாந்தின் வைத்திய இயக்குனர் பேராசிரியர் சர் ஸ்டீபன் போவிஸ் தெரிவித்துள்ளார்.