பாகிஸ்தானின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர், அந்நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர், இஸ்லாமாபாத்தில் உள்ள மரியாட் என்ற இடத்துக்கு அருகே நேற்று முன்தினம் (15) அமைச்சர் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென மற்றொரு காரென்று அமைச்சர் முப்தியின் கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்ட பொதுமக்கள், வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், செல்லும் வழியிலேயே அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் 5 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் விபத்தில் உயிரிழந்த முப்தி அப்துல் ஷக்கூர் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.