June 9, 2023 9:10 am

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மூழ்கி வருகிறது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வானை தொடும் உயரத்தில் உயர்ந்து நிற்கும் கட்டிட  அழுத்தம் காரணமாக, அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க்  நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. ஏறத்தாழ  1.7 ட்ரில்லியன் பவுண்டுகள் எடையிலான அழுத்தத்தை பூமிக்கு கொடுக்கின்றன. இவற்றின் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 1 முதல் 2 மில்லிமீட்டர் அளவு நியூயார்க் நகரம் மூழ்கிவருவதாக கூறப்படுகிறது.

செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நியூயோர்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்