அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை “கிரீன் கார்ட்” பெறுவதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்த தளர்வின் மூலம் கடுமையான உடல் நல பாதிப்பு அல்லது இயலாமை மற்றும் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்கும் நிறுவனத்துடன் ஏற்படும் மோதல்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சவால்களை சந்தித்து வரும் வெளிநாட்டவர்கள், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் அவர்களுக்கு “கிரீன் கார்ட் ” வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அட்டை எனப்படும் “கிரீன் கார்ட் ” வழங்கப்படுகிறது.
இந்த கிரீன் கார்ட் மூலம் அமெரிக்கர்கள் பெரும் அனைத்து வசதிகள் மற்றும் சலுகைகளை வெளிநாட்டவர்கள் பெற முடியும்.
ஆண்டுதோறும் சுமார் 1,40,000 பேருக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டுகளை வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்கா வழங்குகிறது.
மேலும் கிரீன் கார்டுகளின் பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்கும், மற்ற நாடுகள் அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்துவதை தடுப்பதற்கும் அதிகபட்சமாக ஒவ்வொரு நாட்டிற்கு ஏழு சதவீதம் கிரீன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.