செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அழகு நிலையங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை!

அழகு நிலையங்களுக்கு செல்ல பெண்களுக்கு தடை!

0 minutes read

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு, பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது.

பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது, தொண்டு நிறுவனங்களில் பணி புரியக் கூடாது, பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு இடங்களில் வேலை செய்யக் கூடாது என பல்வேறு தடைகளை தலிபான் விதித்தது.

அந்த வரிசையில், தற்போது காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பல பெண்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.