இந்திய பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (19) நடைபெற்ற கூட்டத்தொடரில் அமளி ஏற்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் தற்காலிகமாக நாடாளுமன்றத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினர்.
பல ஆண்டுகளுக்குப் பின் ஒரே அமர்வில் ஆக அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒழுங்கற்ற நடத்தை கடுமையாகக் கையாளப்படும் என்பதை அது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
சிலர், நாளை மறுநாள் (21) வரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள், எத்தனை நாட்களுக்கு நீக்கப்படுவர் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த புதன்கிழமை (13 ) நாடாளுமன்ற அமர்வின்போது திடீரென இருவர் பார்வையாளர் பகுதியிலிருந்து உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தனர்.
தொடர்புடைய செய்தி : இந்திய பாராளுமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நால்வர் கைது!
அவர்கள் வாசகங்களை முழங்கியதோடு, கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசினர்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட 5 சந்தேகநபர்கள் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.