Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா 15,000 கோடி பெறுமதியான அரண்மனை, 700 கார்கள்; உலகின் பணக்கார குடும்பம்!

15,000 கோடி பெறுமதியான அரண்மனை, 700 கார்கள்; உலகின் பணக்கார குடும்பம்!

1 minutes read

GQ சஞ்சிகையின் அண்மைய தகவல்களுக்கு அமைய, துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் உலகளவில் பணக்கார குடும்பமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

15,678 கோடி ரூபாய் மதிப்புள்ள அரச தலைவர் மாளிகை, தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் புகழ்பெற்ற மன்செஸ்டர் சிட்டி கால்பந்து கழகத்தின் உரிமையைக் கொண்ட இந்த குடும்பம் உலக அரங்கில் இணையற்ற செல்வ செழிப்புடன் காணப்படுகிறது.

18 சகோதரர்கள், 11 சகோதரிகள், ஒன்பது குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் அடங்கிய ஒரு பெரிய குடும்பத்தை நிர்வகிக்கின்றார் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Mohammed bin Zayed Al Nahyan).

அவர்களின் உலகளாவிய நிதி செல்வாக்கின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, அல் நஹ்யான் குடும்பம், உலகின் எண்ணெய் இருப்புகளில் சுமார் 6 சதவீதத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் புகழ்பெற்று விளங்குகிறது.

ரிஹானாவின் பென்டி பியூட்டி (Fenty beauty), எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) வரை பல்வேறு தொழில்களில் இந்த குடும்பம் முதலீடுகளைக் கொண்டுள்ளது.

குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் (Sheikh Hamad bin Hamdan Al Nahyan) 700ற்கும் மேற்பட்ட கார்களை வாங்கிக் குவித்துள்ளார். இவை அனைத்தும் மிக விலையுயர்ந்த கார்களாகும்.

அபுதாபியை தளமாகக் கொண்ட குடும்பத்தின் முக்கிய வீடு காஸ்ர் அல்-வதன் (Qasr Al-Watan) ஜனாதிபதி மாளிகையாகும், இது அமைதியான சூழலில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 94 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது. இது விலைமதிப்பற்ற வரலாற்று கலைப்பொருட்களுக்கான களஞ்சியமாகவும் காணப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எல்லைகளுக்கு அப்பால், துபாய் அரச குடும்பம் பரிஸ் மற்றும் லண்டனில் உள்ள மதிப்புமிக்க இடங்கள் உட்பட, உலகளவில் செழுமையான சொத்துகளைக் கொண்டுள்ளது.

மூலம் : The Economic Times

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More