இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் ஹூக்ளி ஆற்றில் 32 மீட்டர் ஆழத்தில் இதை உருவாக்கி உள்ளனர்.
சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு ஆற்றின் கீழ் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், இதனை 45 வினாடிகளில் மெட்ரோ ரயில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆற்று தண்ணீர் மட்டத்தில் இருந்து சுமார் 16 மீட்டர் ஆழத்தில் இந்த மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளதுடன், இந்த நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி, மாணவர்களுடன் அமர்ந்து உரையாடியபடியே பயணம் மேற்கொண்டார்.
தினமும் 7 லட்சம் பயணிகள் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.