அன்னையர் தினத்தையொட்டி, வேல்ஸ் இளவரசி கேத்தரின் அவர்களின் மூன்று குழந்தைகளுடன் இருப்பதைப் போன்று, கென்சிங்டன் அரண்மனையால் வெளியிடப்பட்ட புகைப்படம் போலி என்ற சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளது.
அப்புகைப்படத்தை இளவரசர் வில்லியம் எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அது போலியானது என்றும் அதைப் பொதுமக்கள் பகிர வேண்டும் என்றும் முன்னணி புகைப்பட முகவர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இளவரசி சார்லோட், இளவரசர் லூயிஸ் மற்றும் இளவரசர் ஜார்ஜ் ஆகியோரால் சூழப்பட்ட இளவரசி கேத்தரின் அமர்ந்திருப்பதை புகைப்படம் காட்டுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வேல்ஸ் இளவரசி வயிற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு எடுக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் இதுவாகும்.
அப்போதிருந்து, அவர் மக்கள் பார்வையில் இருந்து விலகி இருக்கிறார்.
வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியின் சமூக ஊடக கணக்குகளில் கேத்தரின் ஒரு செய்தியுடன் படம் வெளியிடப்பட்டது: “கடந்த இரண்டு மாதங்களாக உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.
“அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரச தம்பதிகள் தங்கள் சொந்த குடும்ப நிகழ்வுகளின் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. பெரும்பாலும், புகைப்படங்கள் கேத்தரின் மூலம் எடுக்கப்படுகின்றன.
மேலும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான வழிமுறைகளுடன் ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஆனால், நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட புகைப்படத்தை Getty, AP மற்றும் AFP ஆகிய புகைப்பட முகவர் நிறுவனங்கள் திரும்பப்பெற்றுள்ளன.
அது போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என அவை உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விடயம் குறித்து கென்சிங்டன் அரண்மனை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.