இந்தியா – டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்கும்படி, டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவரை மேலும் விசாரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர் வேண்டுமென்றே ஒத்துழைக்க மறுப்பதாகவும் கூறப்பட்டது.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மதுபான விற்பனைக் குத்தகையாளர்களிடமிருந்து கெஜ்ரிவால் 12 மில்லியன் டொலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி அவை கட்டுக்கதைகள் என்று கூறி, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் வேளையில் கெஜ்ரிவால் தொடர்ந்து கட்சியின் தலைவராக இருப்பார் என்றும் தெரிவருகிறது.