இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்துள்ளது ஹீத்ரு விமான நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்.
இந்த விமான நிலையத்தின் 3ஆவது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் பயணிகளை நேற்று இறக்கிவிட்டது.
அப்போது அதே ரன்வேயில் வந்திறங்கிய மற்றொரு விமானத்தின் இறக்கை பகுதி லேசாக உரசியது. இதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.
எனினும், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்தது.