வில்ட்ஷயரில் எட்டு வயது சிறுவன், காரில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் வெஸ்ட்பரிக்கு அருகிலுள்ள டில்டன் மார்ஷில் உள்ள உட்லேண்ட் வியூவில் கார் ஒன்று, பாதசாரிகள் மோதிய சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக 30 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தினை நேரில் கண்டவர்கள் மற்றும் டாஷ்கேம் வீடியோ காட்சிகளை வைத்திருப்பவர்கள் வில்ட்ஷயர் பொலிஸாரை 01225 694597 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.