பாடசாலைக்கு நடந்து செல்லும் போது வாள்வெட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட டேனியல் அன்ஜோரின் என்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
14 வயதான டேனியல், கிழக்கு லண்டனில் உள்ள ஹைனால்ட்டில் வாளால் தாக்கப்பட்டார், இதன்போது, அவரது கழுத்து மற்றும் மார்பில் ஆபத்தான காயங்கள் ஏற்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை காலை, சம்பவம் நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஹைனால்ட் அண்டர்கிரவுண்ட் ஸ்டேஷன் கார் பார்க்கிங்கில்அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
எனினும், டானியலின் குடும்பத்தினர் விழிப்புணர்வில் கலந்து கொள்ளவில்லை.