தென்கிழக்கு இலண்டனில் பகல் நேரத்தில் கத்தி போன்ற ஆயுதத்தால் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன், வூல்விச்சின் பிளம்ஸ்டெட் வீதியில் குறைந்தது நான்கு பேர் கொண்ட குழுவுக்கு எதிராகப் போராட முயன்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள், திங்கட்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு தாக்குதல் நடத்துபவர், ஒரு நீண்ட கத்தி போன்ற ஆயுதத்தை பிடித்துக் கொண்டு, அவரது பையைப் பிடிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது.
கருப்பு நிறத்தில் ஆடை மற்றும் முகமூடி அணிந்த சந்தேக நபர்கள், வெளிர் நீல நிற டி-ஷர்ட் அணிந்த இளைஞனை தாக்கியதை பேருந்தில் பயணித்த பயணிகள் வீடியோவாக பதிவுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகள் மற்றும் இலண்டன் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஏர் ஆம்புலன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, 20 வயதுடைய கத்தியால் குத்தப்பட்டவரை மீட்டனர்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அவரது காயங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், CAD 5218/13MAY ஐ மேற்கோள் காட்டி, 101 மற்றும் அல்லது 0800 555 111 எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Happened in Woolwich today a group of youths try to take a lad bag and one pulls out a knife out .. pic.twitter.com/wu0uwNDztn
— London & UK Street News (@CrimeLdn) May 13, 2024