பிரேசிலில் வருகிற நவம்பர் மாதம் ஜி-20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் `லைட்ஸ் ஆப் கொரியா’ என்ற கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பிரேசிலின் புகழ்பெற்ற `கிறிஸ்ட் தி ரிடீமர்’ எனப்படும் ‘மீட்பர்’ இயேசு கிறிஸ்துவின் சிலை கொரியாவின் பாரம்பரிய ஆடையால் வண்ண விளக்குகள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வண்ண விளக்குகள் தென் கொரிய ஆடை வடிவமைப்பாளர் ஜின் ஹீ லீயால் திட்டமிடப்பட்டதுடன், இயேசு கிறிஸ்துவின் சிலை மற்றொரு நாட்டின் பாரம்பரிய ஆடையில் அலங்கரிக்கப்படுவது இதுவே முதன்முறையாக உள்ளது.
கடந்த 1931ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட ‘மீட்பர்’ இயேசு சிலையானது 98 அடி உயரம் கொண்டதாகும்.