ஆப்பிரிக்காவில் குரங்கம்மை எனும் mpox நோய்ச் சம்பவங்கள் பெருகுவது அனைத்துலக நோய் நெருக்கடியாக உருவெடுக்கும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், mpox நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு 100,000 முறை போடுவதற்குத் தேவையான தடுப்புமருந்துகளை பிரான்ஸ் நன்கொடையாக அளிக்கவிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாகத் தடுப்புமருந்துகள் அனுப்பப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் கேப்ரியல் அட்டால் தெரிவித்தார். பிரான்ஸ் அதன் வட்டாரங்களில் தடுப்பூசி நிலையங்களையும் நிறுவிவருகிறது.
தொடர்புடைய செய்தி : உலக சுதாதார நெருக்கடி; சுதாதார ஸ்தாபனம் அறிவிப்பு
முன்னதாக, காங்கோ குடியரசுக்கு 50,000 mpox தடுப்புமருந்துகளைத் தருவதாக அமெரிக்கா கூறியது.
தடுப்புமருந்துகளின் உற்பத்தி பெருமளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.