ஹெரோய்ன் மற்றும் கொகெய்ன் உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களை நுகர்வதற்கான முதலாவது அதிகாரப்பூர்வ அறை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி ஸ்கொட்லாந்து – கிளாஸ்கோ (Glasgow) நகரில் திறக்கப்படவுள்ளது.
நகரின் கிழக்கு பகுதியில் உள்ள ஹண்டர் வீதியில் (Hunter Street) திறக்கப்படவுள்ள இந்த போதைப்பொருள் நுகர்வு வசதி ஒரே நேரத்தில் 30 பயனர்களுக்கு இடமளிக்கும் வகையில் அமையப்பெறும்.
வருடம் முழுவதும் 365 நாட்களும் காலை 09 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ், சட்டவிரோத மருந்துகளை மக்கள் நுகர முடியும்.
ஸ்கொட்லாந்தின் தேசிய பதிவுகளின் புதிய தரவுகளின் படி, நாட்டில் போதைப்பொருள் பாவனையால் இறந்தவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.
2023ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி 1,172 பேர் இறந்துள்ளனர். அற்கு முன்னர் 2022 ஆம் ஆண்டு 121 பேர் இறந்துள்ளனர். இது 12 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.
“இந்த உயர்வு, நாங்கள் பொது சுகாதார அவசரநிலையில் இருக்கிறோம் மற்றும் தீவிர உதவி நடவடிக்கை தேவைப்படும் என்பதைக் தெளிவுபடுத்துகிறது” என கிளாஸ்கோ நகர சபையின் வீடற்றவர்கள் மற்றும் அடிமையாதல் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஆலன் கேசி தெரிவித்தார்.
எனவே, மருத்துவ ஊழியர்களின் மேற்பார்வையின் கீழ் மருந்துகளைப் பயன்படுத்த பாதுகாப்பான மற்றும் சுத்தமான இடத்தை வழங்குவதன் மூலம் இந்த ஆபத்தான மற்றும் மரணம் ஏற்படும் அதிகப்படியான அளவைக் குறைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.