கிழக்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை (26) அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
அதிகாலை 02:44 மணிக்கு தீ அலாரம் எழுப்பப்பட்டதை அடுத்து, 225 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 கருவிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர. மேலும் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
டாகன்ஹாம், ஃப்ரெஷ்வாட்டர் வீதியில் உள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பின் ஆறாவது தளம் வரை தீ பரவியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுவொரு பெரிய தீ சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் தீயணைப்பு ஆணையர் ஆண்டி ரோ, இது “எங்கள் வளங்களை சம்பவத்தில் கவனம் செலுத்த அனுமதிக்கும்” என்று கூறினார்.
மேலும், லண்டன் தீயணைப்புப் படைக்குத் தெரிந்த பல தீ பாதுகாப்புச் சிக்கல்களைக் கட்டிடம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.