செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா பஸ்களில் இருந்து இறக்கப்பட்டு 23 பயணிகள் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் கொடூரம்

பஸ்களில் இருந்து இறக்கப்பட்டு 23 பயணிகள் சுட்டுக்கொலை; பாகிஸ்தானில் கொடூரம்

1 minutes read

தென்மேற்கு பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்களில் பயணித்தவர்களை தடுத்து நிறுத்திய பயங்கரவாதிகள், அவர்களை இறக்கிவிட்டு, அவர்களின் அடையாளங்களைச் சரிபார்த்த நிலையில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதிகள் 10 வாகனங்களுக்கும் தீ வைத்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரே இரவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஆயுதம் ஏந்திய நபர்கள், அடையாள ஆவணங்களைச் சரிபார்த்து, வாகனங்களை தீ வைப்பதற்கு முன், சுடப்பட வேண்டிய பஞ்சாபிலிருந்து வந்தவர்களைக் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் BLA (The Baloch Liberation Army) என்ற பயங்கரவாத அமைப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாகாணம் முழுவதும் உள்ள பாதுகாப்புப் படைகளின் முகாம்கள் உட்பட பல அரசு நிறுவனங்களின் மீது BLA தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியுள்ளது.

“அவர்கள் 22 வாகனங்களை நிறுத்தினர்” என்றும் “பஞ்சாப் செல்லும் மற்றும் அங்கிருந்து செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, பஞ்சாபைச் சேர்ந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுடப்பட்டனர்” என AFP செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிவில் உடையில் பயணிக்கும் இராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக BLA கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு முன், BLA பலூச் பொதுமக்களை நெடுஞ்சாலையில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்தது. அவர்களின் “போராட்டம் ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான் இராணுவத்திற்கு எதிரானது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

பலுசிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதமும் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், 09 பயணிகள் ஒரு பஸ்ஸில் இருந்து இறக்கி, அவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பல மேற்கத்திய நாடுகள் BLA ஐ உலகளாவிய பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More