தெற்கு லண்டனில் பொலிஸ் அதிகாரி மார்ட்டின் பிளேக்கினால் (வயது 40) சுட்டுக் கொல்லப்பட்ட “கிறிஸ் கபா” என்ற இளைஞன், அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இரவு விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி, ஆயுதமேந்திய வாகனம் நிறுத்தப்பட்டபோது கிறிஸ் கபா தலையில் சுடப்பட்டார்.
2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதியன்று கிழக்கு லண்டனில் உள்ள டவர் ஹேம்லெட்ஸில் உள்ள இரவு விடுதியில் நபரொருவரை அவர் சுட்டுக் கொன்றதாக இப்போது தெரிவிக்கப்பட்டது.
குறித்த இளைஞன் கிறிஸ் கபா கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மார்ட்டின் பிளேக் குற்றம் அற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி : நபரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்தில் பொலிஸ அதிகாரி விடுவிப்பு
கபாவின் பின்னணி பற்றிய விவரங்கள் மீதான விசாரணையின் போது நடைமுறையில் இருந்த தடைகளை நீதிபதி நீக்கியுள்ளார்.
துப்பாக்கி ஏந்தியிருக்காத 24 வயது இளைஞனைக் கொல்லும் எண்ணத்தை பிளேக் மறுத்தார். மேலும், அவர் பொலிஸார் வாகனத்தை நிறுத்தத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது அவர் சுடப்பட்டதாக விசாரணையில் கூறினார்.
டவர் ஹேம்லெட்ஸில் உள்ள இரவு விடுதியில் இரவு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடைய மேலும் மூன்று பேர் ஏற்கெனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சிறையில் உள்ளனர்.
அவர்களின் விசாரணையின் போது, பொலிஸ் அதிகாரி மார்ட்டின் பிளேக்கினால் சுட்டுக் கொல்லப்பட்ட கபாவை துப்பாக்கிதாரி என நீதிபதி பெயரிட்டார்.
இரவு விடுதியில் நடனமாடும் மைதானத்தில் இருந்தபோது கபா அந்த நபரின் காலில் ஒருமுறை சுட்டதாகவும், அந்த நபர் தப்பிக்க முயன்றபோது வெளியே ஒருமுறை சுட்டதாகவும் நீதிபதி கூறினார்.
எனினும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பே இளைஞன் கபா இறந்துவிட்டார். ஆனால், பின்னர் விசாரணைக்கான குற்றப்பத்திரிகையில் அவர் பெயரிடப்பட்டார்.