ஜேபி என அழைக்கப்படும் சக்திவாய்ந்த சூறாவளியொன்று மீண்டும் ஜப்பானை தாக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சூறாவளி ஜப்பானை நோக்கி 252 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்வதாக ஜப்பான் நாட்டு வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.
எதிர்வரும் செவ்வாய் கிழமை ஜப்பானின் பிரதான தீவுகளை இந்த சூறாவளி தாக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ஜப்பானில் ஏற்பட்ட கடும் புயலினை தொடர்ந்து ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 220 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.