மலேசியாவில் குடிவரவு விதிமீறல்களுக்காக சிறையில் வைக்கப்பட்டிருந்த 81 இந்தோனேசிய தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவின் Batam மற்றும் Sribintan Pura துறைமுகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள சூழலில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளதாக இந்தோனேசியாவின் சமூக விவகாரங்கள் அமைச்சகத்தின் ஒருங்கிணைப்பாளர் பிட்டர் மடகெனா கூறியுள்ளார்.
இந்த 81 தொழிலாளர்களில் 46 பேர் ஆண்கள், 33 பேர் பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இவர்கள் அனைவரும் TanjungPinang பகுதியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.