ஆசிய மற்றும் ஐரோப்பா கண்டங்களின் பகுதி சார் நடுநிலை நாடான துருக்கியில் கருங்கடல் பகுதி அடிக்கடி மழை வெள்ளத்தில் பாதிப்படைகிறது. கடந்த சில நாட்கள் தொடர் மழை பெய்து வரும் நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை காணப்படுவதுடன் 100க்கு அதிகமான வீடுகள் சேதமடைந்துமுள்ளது பல கார்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு பயன் பாட்டுக்கு உதவாத நிலை ஏற்பட்டுள்ளது .
வெள்ளத்தினால் சில நிலப்பகுதிகள் கரைந்து விழுந்துள்ளதுடன் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது ஆகஸ்ட் மாதம் ஏற்பட்டவெள்ளம் , நிலக்ச்சரிவை போல இதுவும் ஆபத்தை விளைவித்துள்ளது.