காஸாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையை இஸ்ரேல் தாக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் 8 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் நாசர் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பு பிணைக்கைதிகளை ஒளித்துவைத்திருந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
ஹமாஸ் அதனைப் பொய் என்று சொல்லி நிராகரித்தது.
தொலைபேசியில் உள்ள விளக்குகளைக் கொண்டு தேடல் மீட்புப் படையினர் நோயாளிகளுக்கு உதவுகின்றனர்.
இஸ்ரேலியப் படைகள் மருத்துவமனையைச் சுற்றிவளைத்ததாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் மருத்துவமனையில் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர்.
இன்றைக்குள் எரிபொருள் தீர்ந்துவிடும் என்று மருத்துவமனை கூறியது.
நாசர் மருத்துவமனை பேரழிவு நிலையில் இருப்பதாக காஸாவின் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.