நடிகராக இருந்து பல சாதனைகளை செய்த கமலஹாசன் இப்போது அரசியலில் குதித்து சிறிய காலத்திற்குள் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
தான் அரசியலிலும் சாதனைகளை செய்தே தீருவேன் என்று கூறி வரும் நிலையில் அதற்கான பணிகளை செய்ய ஆரம்பித்துள்ளார்.
அதில் முதற்கட்டமாக அவரது மக்கள் நீதி மய்ய துணை தலைவர்களான மவுரியா, தங்கவேலு ஆகியவருடன் 117 மாவட்ட செயலாளர்களுடன் மாவட்ட செயற்பாட்டு கூட்டமாக 16/11/2022 அன்று சென்னையில் அண்ணா நகரில் நடத்தினார்
இந்த கூட்டதொடரில் கமலஹாசன் கட்சி தொடர்பில் பல முடிவுகளை எடுத்தார்.
2018 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து 2019 சட்டமன்ற தேர்தல் சமத்துவ கட்சி ,இந்திய ஜனநாயக கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து தோல்வியை அடைந்தார் .2021 வேட்பாளர்கள் சொல்லும் அளவில் வாக்குகளை பெற்றனர்.
மேலும் தேர்தல் சமயங்களில் பட சூட்டுகளில் கவனம் செலுத்தியமையால் தன்னால் தேர்தலில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போனதும் குறிப்பிட தக்க விடயமாக உள்ள நிலையில் தற்போது புது வியூகங்களை அமைத்து செயற்பட உள்ளார் .
அதில் 2024 நடைபெற உள்ள பாராளமன்ற தேர்தலுக்காக இப்போதே வேலைத்திட்டங்களை வகுத்து செயற்பட உள்ள நிலையில் அதை பற்றி குழு கூட்டத்தில் பேசியவர் களப்பணி ,கட்சிப்பணி தொடர்ப்பிலும் பூத் கமிட்டி தொடர்பிலும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும். இந்த கூட்டத்தில் அனைவரும் எதிர் பார்த்த விடயமான கூட்டணி அமைத்தல் தொடர்பில் கருத்தை குறிப்பால் கூறினார் எப்படி இருப்பினும் கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.
இது தொடர்பில் மேலும் ஒரு செய்தி உலாவுகின்றது தி்முகவுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பதற்கு நிறைய வாய்ப்பு உள்ளதாகவும் 2 அல்லது 3 தொகுதிகளில் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் மேலும் மறுபக்கம் ஐஜேகே திமுக கூட்டணியை உடைத்து பாஜகவுடன் கைகோர்க்க உள்ள நிலையில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என அரசியல் வட்டாரம் கூறுகிறது.
இந்த கூட்டத்தின் விளைவாக சுற்றுப்பயணம் ஒன்றை தமிழகம் எங்கும் செய்ய உள்ளார்.இந்த சுற்றுப்பயணம் முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பாக உள்ளது இந்த மக்கள் சந்திப்பில் மக்களுக்கு கட்சியின் செயற்பாட்டை விளங்கப்படுத்த உள்ளார் .
இந்த மக்கள் சந்திப்பு வியூகத்தை பயன் படுத்த முதல் அவர் மீண்டும் தன் கட்சி தலைவர்களான மவுரியா,தங்கவேலு,மாநில செயலாளர்களான செந்தில் ஆறுமுகம் ,முரளி அப்பாஸ்,கவிஞர் சினேகன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி பின்னரே இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவும் உள்ளார்.
அத்துடன் இந்த தேர்தலில் போன தேர்தலில் வெற்றியின் விளிம்புக்கு கொண்டு சென்ற கோவையில் போட்டியிடவும் உள்ளார்.