இந்தியாவின் 121 ஆண்டு வரலாற்றில் 12 புயல் சென்னை- புதுச்சேரி வழியாக இதுவரை கரை கடந்துள்ள நிலையில் இது 13 வது புயலாக அமையப்பெற்றுள்ளது இதில் 2 புயல் அரபி கடல் நோக்கி சென்றுள்ளது அந்த வரிசையில் இதும் ஒன்றாகும் .
புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கடந்ததுடன் கரையை கடந்த மேண்டஸ் சூறாவளி இன்று காலை காற்றழுத்தமாக மாற இருப்பதனால் இந்திய வட உள்மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும்
மேலும் இந்த புயலின் தாக்கத்தல் ஆங்காங்கே மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதுடன் வீதியோரங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது எனவே இவற்றை அகற்றும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்திய மடிப்பாக்கத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததில் 2 பேர் பலியாகி உள்ளனர் 45 வயது தாய் 25 வயது மகன் என இனங்காண பட்டுள்ளனர்.
நள்ளிரவில் 75km வேகத்தில் காற்று வீசிய போதே இந்நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மதியத்துக்குள் மின் நிலைமை100% சீருக்கு வரும் என்றும் அதற்காக சென்னையில் மாத்திரம் 1100 மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.